அவசர உதவிகோரல்.! உயிா்காக்கும் உன்னத பணியில் இணையுங்கள்.
யாழ்.போதனா வைத்தியசாலையின் குருதி வங்கியில் (A-), (O-) குருதி வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், இந்த குருதி வகையை கொண்ட குருதி கொடையாளா்களிடம் உதவி கோரப்பட்டுள்ளது.
எனவே, மேற்படி குருதி வகையையுடைய குருதிக் கொடையாளர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவுக்கு சமூகமளித்து உயிர்காக்கும் உன்னத பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இரத்த வங்கிப் பிரிவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலதிக விபரங்களுக்கு 0772105375 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.