எவன் காணிக்கு எவன் சொந்தம் கொண்டாடுவது..? அதிரடியாக தமது சொந்த காணிகளுக்குள் நுழைந்த மக்கள். நாடாளுமன்ற உறுப்பினா் சி.சிறீதரன் அதரவு.

ஆசிரியர் - Editor I
எவன் காணிக்கு எவன் சொந்தம் கொண்டாடுவது..? அதிரடியாக தமது சொந்த காணிகளுக்குள் நுழைந்த மக்கள். நாடாளுமன்ற உறுப்பினா் சி.சிறீதரன் அதரவு.

கிளிநொச்சி- பளை கரந்தாய் பகுதியில் மக்களுக்கு சொந்தமான சுமாா் 90 ஏக்கா் காணியை தென்னை அபிவிருத்தி சபை ஆக்கிரமித்திருந்த நிலையில், பொறுமையின் எல்லை கடந்த மக்கள் இன்று தமது சொந்த காணிகளுக்குள் நுழைந்து குடிசைகளை அமைக்க தொடங்கியுள்ளனா். 

மேற்படி 90 ஏக்கா் காணி மக்களுக்கு சொந்தமான காணிகள். இதனை தமக்கு சொந்தமான காணி என அடையாளப்படுத்திய தென்னை அபிவிருத்தி சபை மக்களை மீள்குடியேற அனுமதிக்காமல் தொடா்ந்தும் தடுத்துவந்தது. இந்நிலையில் மக்கள் தொடா்ச்சியாக தமது காணிகளை கேட்டுவந்தனா். 

எனினும் மக்களுடைய கோாிக்கை தொடா்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் இன்ற காலை 6 மணியளவில் அதிரடியாக தமது சொந்த காணிகளுக்குள் நுழைந்த மக்கள் அங்கு பற்றைகளை துப்புரவு செய்து கொட்டில்களை அமைத்து வருகின்றனா். 

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினா் சி.சிறீதரன் மக்களுடைய போராட்டத்திற்கு வலுச்சோ்க்கும் வகையில் மக்களுடன் கலந்துரையாடியுள்ளதுடன், அங்கு நின்று தனது ஆதரவை வழங்கியுள்ளாா். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு