வேலைவாய்ப்பு பெற்றுக் கொடுப்பதாக கூறி இளைஞா்களை ஏமாற்றி லட்சாதிபதியான கள்ளன் கைது, விசாரணைகள் தீவிரம்..

ஆசிரியர் - Editor I
வேலைவாய்ப்பு பெற்றுக் கொடுப்பதாக கூறி இளைஞா்களை ஏமாற்றி லட்சாதிபதியான கள்ளன் கைது, விசாரணைகள் தீவிரம்..

வேலைவாய்ப்பு பெற்றுக் கொடுப்பதாக பொய்கூறி பல யாழ்ப்பாண இளைஞா்களை மோசடி செய்து பெருமளவு பணம் பெற்ற ஒருவரை யாழ்.பெருங்குற்றத்தடுப்பு பொலிஸாா் கைது செய்துள்ளனா். 

யாழ்ப்பாணம் வேம்படி சந்தியில் உள்ள பிரபல தனியார் நிறுவனம் ஒன்றின் உரிமையாளரான பிரசாத் என்பவரே பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் ஈச்சமோட்டைப் பகுதியைச் சேர்ந்த நபரான பிரசாத் என்பவர் யாழ்.வேம்படி சந்தி, மத்திய கல்லூரிக்கும் வேம்படி மகளிர் கல்லூரியையும் இணைக்கும் சந்தியில் உள்ள வீடொன்றில் இந்த வின்ஸ்ரார் தனியார் நிறுவனம் அமைந்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி, பலரிடம் பண மோசடி செய்துள்ளார். மோசடியினால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் ஓரிரு தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ததன் பிரகாரம்,

இன்றும்  நபர் ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பெருங்குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

அந்த முறைப்பாட்டின் பிரகாரம், வின்ஸ்ரார் தனியார் நிறுவன உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு