சுமந்திரனை மன்னிப்பதே தமிழா்கள் செய்யும் ஆக பொிய வரலாற்று தவறாக அமையும். கூறுவது சீ.வி.விக்னேஸ்வரன்..

ஆசிரியர் - Editor I
சுமந்திரனை மன்னிப்பதே தமிழா்கள் செய்யும் ஆக பொிய வரலாற்று தவறாக அமையும். கூறுவது சீ.வி.விக்னேஸ்வரன்..

பல லட்சம் மக்களை படுகொலை செய்து, பல நுாற்றுக்கணக்கான தமிழ் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த இராணுவத்தை காப்பாற்றும் வகையில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன் பேசுவது வருத்தத்திற்குாியது. 

மேற்கண்டவாறு கூறியுள்ள முன்னாள் முதலமைச்சா் சீ.வி.விக்னேஸ்வரன், எமது மக்­கள் இதனை மன்­னிக்­க­ மாட்­டார்­கள். பன்­னாட்டு விசா­ரணை எப்­பொ­ழுதோ முடிந்து விட்­டது என்­ப­தை­யும் எமது மக்­கள் மறந்து விடமாட்­டார்­கள். எனவும் கூறியுள்ளாா். 

இது தொடா்பாக மேலும் அவா் கூறியுள்ளதாவது, 

கூட்­ட­மைப்­பின் பேச்­சா­ள­ரும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­தி­ரன் இதற்­குப் பதி­லடி கொடுக்­கும் விதத்­தில், இலங்கை அரசு கூறு­வ­தைப் போன்றே முன்­னாள் முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ர­னும் கூறு­கின்­றார். அவர் அர­சின் ஊது­கு­ழ­லா­கச் செயற்­ப­டு­கின்­றாரா? என்று கேள்வி எழுப்­பி­யி­ருந்­தார்.

அர­சின் வாதம் தவறு..

இலங்­கை­யில் வெளி­நாட்டு நீதி­ப­தி­களை கொண்ட கலப்பு நீதி­மன்­றம் ஒன்றை சட்­ட­ரீ­தி­யாக அமைக்க முடியாது என்ற அர­சின் வாதம் தவ­றா­னது என்­பதை சுட்­டிக்­காட்­டு­வ­தற்­கா­கவே நீதி­ய­ர­சர் பக­வதி தலைமையில் அமைக்­கப்­பட்ட பன்­னாட்­டுச் சுயா­தீன குழுவை உதா­ர­ண­மாக சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­தேன்.

அறிக்­கை­யின் எந்த இடத்­தி­லும் பக­வதி தலை­மை­யி­லான பன்­னாட்­டுச் சுயா­தீன குழுவை போன்ற ஒரு குழுவை அமைக்க வேண்­டும் என்று குறிப்­பி­ட­வில்லை. இலங்­கை­யில் உள்­நாட்­டில் அமைக்­கப்­பட்ட உள்­ளக ஆணைக்­கு­ழு­வான உட­ல­கம விசா­ரணை ஆணைக்­கு­ழுவை மேற்­பார்வை செய்­வ­தற்­காக 

அமைக்­கப்­பட்­டதே பக­வதி தலை­மை­யி­லான பன்­னாட்­டுச் சுயா­தீன குழு என்­றும் பன்­னாட்­டுத் தரா­த­ரங்­கள் மற்­றும் விதி முறை­க­ளுக்கு அமை­வாக இந்த உள்­ளக ஆணைக்­குழு செயற்­ப­ட­வில்லை என்று பக­வதி தலைமையி­லான குழு தன்­னைத் தானே கலைத்­தமை இலங்­கை­யில் ஏன் பன்­னாட்டு விசா­ரணை அவ­சி­யம்?

 என்­ப­தை­யும் எடுத்­துக் காட்­டு­கின்­றது என்­றும் தெளி­வாக எனது அறிக்­கை­யில் குறிப்­பிட்­டுள்­ளேன். பக­வதி ஆணைக்­கு­ழு­வின் உதா­ர­ணம் வெளி­நாட்டு நீதி­ப­தி­களை உள்­ள­டக்­கிய பன்­னாட்டு விசா­ரணை பொறிமுறையையே எடுத்­துக்­காட்­டு­கி­றது.

நிலைப்­பாட்­டில் மாற்­ற­மில்லை..

இலங்­கை­யில் மேற்­கொள்­ளப்­பட்ட போர்க்­குற்­றங்­களை விசா­ரணை செய்­வ­தற்கு பன்­னாட்டு விசா­ரணை பொறி­முறை ஒன்றே தீர்வு என்­ப­தில் நான் உறு­தி­யா­க­வும் தெளி­வா­க­வும் இருக்­கி­றேன். இதனை பல சந்தர்ப்பங்­க­ளில் வலி­யு­றுத்தி அதற்­கான பணி­க­ளை­யும் ஆரம்­பித்­துள்­ளேன்.

இலங்­கையை பன்­னாட்­டுக் குற்­ற­வி­யல் நீதி­மன்­றத்­துக்கு கொண்­டு­செல்­ல­வேண்­டும் என்று செப்­ரெம்­பர் 2018 இல் நான் முத­ல­மைச்­ச­ராக இருந்­த­போது வட மாகாண சபை­யில் தீர்­மா­னத்­தை­யும் நிறை­வேற்­றி­யுள்­ளேன். 

இவ்­வாண்டு மார்ச் மாதம் மனித உரி­மை­கள் சபை அமர்­வு­க­ளுக்கு முன்­ன­தாக வடக்கு கிழக்­கில் மேற்கொள்ளப்­பட்ட ஆர்ப்­பாட்­டங்­கள் மற்­றும் பேர­ணி­க­ளி­லும் பன்­னாட்­டுக் குற்­ற­வி­யல் நீதி­மன்­றத்­துக்கு இலங்­கை­யைக் கொண்டு செல்­ல­வேண்­டும் என்றே வலி­யு­றுத்­தப்­பட்­டன. 

நானும் இந்த அனைத்து ஆர்ப்­பாட்­டங்­க­ளி­லும் கலந்­து­கொண்­டேன். பன்­னாட்­டுக் குற்­ற­வி­யல் நீதி­மன்­றத்­துக்கு இலங்­கையை கொண்­டு­செல்ல வேண்­டும் என்று நான் எனது அறிக்­கை­க­ளி­லும் திரும்­பத் திரும்ப வலியுறுத்தியுள்­ளேன். 

அத்­து­டன் ஐ.நா. மனித உரி­மை­கள் சபை ஆணை­யா­ள­ருக்கு எழு­திய கடி­தத்­தி­லும் இதனை வலியுறுத்தியுள்ளேன். திடீ­ரென்று சூனி­யத்­தில் மூழ்­கிக் கிடந்த ஒரு­வர் விடு­பட்டு வந்­தது போல் தான் இதுகாறும் கூறி­யதை மறந்து எம்­மைக் குற்­றம் சாட்­டு­கி­றார் ஒரு­வர்  என்­றுள்­ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு