நான் ஒன்றும் செய்யவில்லை, ஊடகங்கள் மீது பழியைபோட்டுவிட்டு தள்ளி நிற்கிறாா் ஆளுநா்..
ஐ.நா மனித உாிமைகள் ஆணையாளருடன் இடம்பெற்ற சந்திப்பு குறித்து கூறிய விடயங்களை ஊடகங்கள் தவறாக பிரசுாித்து விட்டதாகவும், அதற்காக தாம் வருந்துவதாகவும் வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவன் வருத்தம் தொிவித்துள்ளாா்.
இலங்கை தொடர்பான அறிக்கையில் தவறுகள் இருப்பதை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் தம்மைச் சந்தித்த போது ஒப்புக் கொண்டிருந்தார் என்றும், அது தொடர்பான தனது அதிகாரிகளைக் கண்டித்தார் என்றும், வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் கூறியிருந்தார்.
இதற்கு மறுப்புத் தெரிவித்து, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பாச்லெட் அம்மையார் நேற்றுமுன்தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இதையடுத்து, வடக்கு ஆளுநர், வருத்தம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஜெனிவாவில் இருந்து திரும்பிய பின்னர் நடத்திய செய்தியாளர் சந்திப் பில், ‘நேர்காணலின் சில பகுதிகள் துரதிஷ்டவசமாக, குறிப்பாக ஆங்கில ஊடகத்தில், மொழியாக்கம் அல்லது தெரியாத காரணங்களால், உண்மையான அர்த்தத்தை இழந்து விட்டது வருத்தத்துக்குரியது.
எல்லா கலந்துரையாடல்களும் முழுமையான இருதரப்பு ஆதரவுடன் இடம்பெற்றன. மனித உரிமை ஆணையாளர் பாச்லெட் அம்மையார் முன்மாதிரியான இராஜதந்திர ஒழுங்கையும் திறன்களையும் வெளிப்படுத்தியவர். அவரை நான் மிகவும் மதிக்கிறேன்.’ என்று ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.