பருத்துறை நகரசபையின் பொறுப்பற்ற செயல், அழுகி போகும் மரக்கறிகள், வீதியில் நிற்கும் வியாபாாிகள்..

ஆசிரியர் - Editor I
பருத்துறை நகரசபையின் பொறுப்பற்ற செயல், அழுகி போகும் மரக்கறிகள், வீதியில் நிற்கும் வியாபாாிகள்..

பருத்தித்துறை மீன் சந்தைக்கு மிக மிக அருகாமையில் சட்டத்திற்கு புறம்பாக மரக்கறி விற்பனையில் ஈடுபட்டுவரும் 4 வியாபாரிகளுக்கு ஆதரவாக பருத்திதுறை நகரசபையின் செயற்பாட்டினால் பருத்தித்துறை பொதுச்சந்தையின் மேல் தளதில் மரக்கறி வியாபாரம் செய்து வரும் 35 வியாபாரிகளின் வாழ்வாதாரம் பெரும் பாதிப்பிற்குள்ளாகி வருகிறது.

இதனை கண்டித்து கடந்த செவ்வாய் கிழமை நில வாடகை கொடுக்காது ஒத்துழையாமை போராட்டத்தை மரக்கறி வியாபாரிகள் மேற்கொண்டிருந்தார்கள். தொடர்ந்து தமது வியாபார நடவடிக்கைகளை புறக்கணித்து வருகின்றார்கள் மூன்றாவது நாளாக வியாபார நடவடிக்கைகள் இன்று வெள்ளிக்கிழமையும் முடக்கப்பட்டுள்ளது.

வடமாகாண உள்ளூராட்சி உதவி ஆணையாளர் இன்று காலை சம்பவ இடத்திற்கு வருகை தந்து நிலைமைகளை ஆய்வு செய்துள்ளார். சட்டத்திற்கு உட்பட்டு மீன் சந்தைக்கு அருகாமையில் மரக்கறி விற்பனையில் ஈடுபட்டு இருப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து பொதுச் சந்தை மேல்தளத்தில் மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் வியாபாரிகள் தமது வியாபார நடவடிக்கைகளை நாளை முதல் மேற்கொள்ள தீர்மானித்துள்ளார்கள்.

இடைப்பட்ட மூன்று நாட்களில் வியாபார நடவடிக்கைகள் புறக்கணிக்கப் பட்டதனால் கொள்முதல் செய்து வைத்திருந்த மரக்கறிகள் பழுதடைந்துள்ளது. இதனால் ஒவ்வொரு வியாபாரிக்கும் சுமார் பத்தாயிரம் பதினையாயிரம் இழப்பு ஏற்பட்டுள்ளது.

பருத்தித்துறை நகர சபையை ஆட்சி செய்து வருபவர்கள் அரசியல் காரணங்களுக்காக பக்கச் சார்பாக நடந்து வருகின்றமையே அனைத்துக் குழப்பங்களுக்கும்காரணமாகும் என பாதிக்கப்பட்டுள்ளார் வியாபாரிகள்குற்றம் சாட்டி உள்ளார்கள்.

பருத்தித்துறை நகரசபை என்பது ஆட்சி செய்யும் குறிப்பிட்ட கட்சிக்கு சொந்தமானது அல்ல. பருத்தித்துறை நகரத்திற்கு பொதுவானது. இதனை மனதில் கொண்டு பொதுப்படையான பாரபட்சமற்ற நிர்வாகத்தை வழங்குவதே முறையாகும்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு