யாழ்.மாநகரசபை ஊழியா்கள் இருவருக்கு நீதிமன்றம் பிணை, சிற்றுாழியா் என்பதால் நோ்மையாக தண்டித்த யாழ்.மாநகரசபை..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகரசபை ஊழியா்கள் இருவருக்கு நீதிமன்றம் பிணை, சிற்றுாழியா் என்பதால் நோ்மையாக தண்டித்த யாழ்.மாநகரசபை..

யாழ்.கல்லுண்டாய் பகுதியில் மல கழிவுகளை கொட்டிய குற்றச்சாட்டில் இருவா் கைது செ ய்யப்பட்டுள்ள நிலையில் கைது செய்யப்பட்ட இருவரும் யாழ்.மாநகரசபை உறுப்பினா்க ள் என தொியவந்துள்ளது. 

யாழ்.கல்லுண்டாய் வெளி பகுதியில் கடந்த 26ஆம் திகதி பகல் வேளை மல கழிவுகளை கொண்ட முயன்றவர்களை அங்கு பாதுகாப்பு கடமையில் இருந்தவர்கள் மடக்கி பிடித்து காவற்துறையினரிடம் ஒப்படைத்தனர். 

அவர்கள் இருவரையும் மல கழிவை ஏற்றிச் சென்ற வாகனத்தையும் காவற்துறையினர் யாழ்.நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தினார்கள். அதன் போது கைது செய்யப்பட்ட இருவரும் யாழ்.மாநகர சபை பணியாளர்கள் என காவற்துறையினர் 

மன்றில் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து இரு ஊழியர்களையும் பிணையில் விடுவித்த நீதிவான் வாகனத்தை தடுத்து வைத்தார். அத்துடன் வழக்கினை ஏப்பிரல் மாதம் 24ஆம் திகதிக்கு 

ஒத்திவைத்தார். அதவேளை கடந்த வாரம் அதிகாலை 12.30 மணியளவில் கழிவுகளை கொண்ட வந்த வாகனத்தை பிடித்த போதிலும் அதில் இருந்த மூவரும் யாழ்,மாநகர சபை பணியாளர்கள் என தெரியவந்தது. 

அவர்கள் மூவருக்கும் எதிராகவும் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு