எந்திர கோளாறால் நடுக்கடலில் தத்தளிக்கும் நார்வே கப்பல்!

ஆசிரியர் - Admin
எந்திர கோளாறால் நடுக்கடலில் தத்தளிக்கும் நார்வே கப்பல்!

மோசமான வானிலை காரணமாக என்ஜின் பழுதாகி நடுக்கடலில் தத்தளித்து வரும் நார்வே கப்பலிலிருந்து, பயணிகளை மீட்கும் பணி தொடர்கிறது. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 1,300 சுற்றுலா பயணிகளுடன் புறப்பட்ட நார்வே கப்பல், கடல் சீற்றம் காரணமாக என்ஜின் கோளாறால் அவதிக்குள்ளானது. இதையடுத்து பாறைகளில் சிக்கி உயிரிழப்பதை தவிர்க்க ஹஸ்டட்விகா பே அருகே கப்பல் வந்ததும், அபாய ஒலி எழுப்பப்பட்டது.

அதைத்தொடர்ந்து, கப்பலிலிருந்தவர்களை மீட்பதற்காக 5 ஹெலிகாப்டர்கள் மற்றும் படகுகள் அங்கு விரைந்தன. ஒவ்வொரு பயணிகளாக கப்பலிருந்து வெளியேற்றிய மீட்பு குழுவினர், இதுவரை 180 பேரை ஹெலிகாப்டர் மூலம் கரை சேர்த்துள்ளனர். தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வரும் நிலையில், பழுதான எஞ்ஜின்களை சரிசெய்து கப்பலை துறைமுகம் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு