யாழ். மாவட்டத்தில் சூடு பிடித்துள்ள இராசவள்ளி விற்பனை

ஆசிரியர் - Admin
யாழ். மாவட்டத்தில் சூடு பிடித்துள்ள இராசவள்ளி விற்பனை

யாழ். மாவட்டத்தில் இராசவள்ளிக் கிழங்கு சீசன் ஆரம்பமாகியுள்ளது. இதனால், யாழ். சந்தைகளில் விற்பனை சூடு பிடித்துள்ளது.

யாழ். குடாநாட்டின் முக்கிய சந்தைகளில் ஒன்றான திருநெல்வேலிச் சந்தையில் இன்று(06) ஒரு கிலோ இராசவள்ளிக் கிழங்கு- 200 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டது.

யாழ். மாவட்டத்தில் தற்போது ஆரம்பாகியுள்ள இராசவள்ளிக் கிழங்கு சீசன் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆரம்பம் வரை நீடிக்குமெனத் தெரிவிக்கப்படுகிறது.

யாழில் நீர்வேலி, புத்தூர், நவக்கிரி,சாவகச்சேரி, கச்சாய் ஆகிய பகுதிகளில் அதிகளவில் இராசவள்ளிக் கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இராசவள்ளிக் கிழங்கு சீசன் ஆரம்பமாவதற்கு முன்னர் ஒரு கிலோ இராசவள்ளிக் கிழங்கு 900, 1000 எனப் பல்வேறு விலைகளில் விற்கப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இராசவள்ளிக் கிழங்கில் தாயாரிக்கப்படும் களி உணவு சிறுவர்கள் முதல் பல தரப்பினரும் விரும்பியுண்ணும் உணவாகக் காணப்படுகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு