வல்வெட்டித்துறை போதைப்பொருள் கடத்தல் மையமானது?

ஆசிரியர் - Admin
வல்வெட்டித்துறை போதைப்பொருள் கடத்தல் மையமானது?

வல்வெட்டித்துறை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட 98 கிலோ எடை கொண்ட சட்டவிரோத போதைப்பொருட்களை வடக்கு கடற்படை கட்டளைப்பிரிவு கைப்பற்றியுள்ளதாக தெரியவருகின்றது.

கேரளா கஞ்சா 80 கிலோவும் 38 துண்டுகள் கெரோயின் (மொத்த எடை 4 கிலோ) மற்றும் 7 பாக்கெட்டுகள் அபின் (மொத்த எடை 4 கிலோ) ஆகியவற்றை உள்ளடக்கியதாக இப்போதைபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட மொத்த சரக்குகளின் சந்தை மதிப்பானது சுமார் 30 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.இதனையடுத்து மேலதிகமாக விசேட அதிரடிப்படை மேலும் விசாரணைகளை முன்னெடுத்துவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே வல்வெட்டித்துறை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் இவை மீட்கப்பட்டுள்ள நிலையில் இக்கடத்தல் பற்றி காவல்துறை அறிந்திருக்கவில்லையாவென கேள்வி எழுந்துள்ளது.

தொடர்ச்சியாக இப்பகுதியில் போதைப்பொருட்கள் மீட்கப்படுகின்றமை காவல்துறையின் ஆதரவுடனேயே நடைபெறுகின்றதாவென்ற சந்தேகத்தை தோற்றுவித்துமுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு