SuperTopAds

பொலிஸாாின் கண்ணில் மண்ணைதுாவி நடந்த கசிப்பு வியபாரம், அதிா்ந்துபோன பொலிஸாா்..

ஆசிரியர் - Editor I
பொலிஸாாின் கண்ணில் மண்ணைதுாவி நடந்த கசிப்பு வியபாரம், அதிா்ந்துபோன பொலிஸாா்..

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பத்தாம் வட்டாரப்பகுதியில் தொடச்சியாக கசிப்பு வி யாபாரம் நடைபெற்று வருவதாக புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலைய பொறுப்பதிகா ரிக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.

இன்னிலையில் 21.03.19 அன்று புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி த லைமையிலான குழுவினர்கள் பத்தாம் வட்டாரப்பகுதிக்கு சென்ற வேளை வீதியால் உந்துருளியில் பயணித்த பெண் ஒருவரை மறித்து  

அவரது உந்துருளியினை சோதனை செய்தபோது விற்பனைக்கு தயாரான நிலையில் பொலீத்தின் பையினால் கட்டப்பட்ட நூறுரூபா பைக்கற்றுக்கள் புதியதாக எடுக்கப்ப ட்ட உந்துருளிக்குள் மறைத்து கொண்டு செல்ல முற்றட்டபோது 

அவரை கைதுசெய்த பொலீசார் அவர் சென்று திரும்பிய வீட்டிற்கு சென்று அங்கு வீட்டினை சோதனை செய்தவேளை அதிகளவான கசிப்பு வீட்டில் கான்களில் வை த்திருந்தமை தெரியவந்துள்ளது இதனை தொடர்ந்து வீட்டில் 

இருந்து கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட பெண்ணினையும் கைதுசெய்துள்ளார்கள். இ வர்களிடம் இருந்து விற்பனைக்கு தயாரான நிலையில் பைக்கட்டில் கட்டப்பட்ட 180 பைக்கட்டுக்களும் வீட்டில் இருபது லீற்றர் கான்களில் இருந்து 

கசிப்பு என 72.4 லீற்றர் கசிப்பினை புதுக்குடியிருப்பு பொலீசார் மீட்டுள்ளார்கள். கு றித்த வீட்டின் உரிமையாளர் அண்மையில் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டவேளை பு துக்குடியிருப்பு பொலீசாரால் கைதுசெய்யப்பட்டு 

அவரது உந்துருளியும் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றத்தினால் அபராதம் விதிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார். இவர்களை நீதிமன்றில் முன்னிலைப் படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக 

புதுக்குடியிருப்பு பொலீசார் தெரிவித்துள்ளார்கள்.