உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் மக்களின் நிலைப்பாடு என்ன?

ஆசிரியர் - Admin
உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் மக்களின் நிலைப்பாடு என்ன?

முன்பெல்லாம் தேர்தல் என்று வந்து விட்டால், நாடே விழாக்கோலம் பூண்டுவிடும். அதிலும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் என் றால், ஊரெல்லாம் வேட்பாளர்களும் அவர் தம் ஆதரவாளர்களும் கூடிவிடுவர்.

மக்களின் கதையயல்லாம் தேர்தல் பற்றி யதுதான். யார் வெற்றி பெறுவர் என்ற விவா தம் தேர்தல் முடிவு வரும் வரை தொடர் நாடகம் போல் நடந்து கொண்டே இருக்கும்.
இந்தக் கட்சியில் எங்கள் மாமா கேட்கிறார். அந்தக் கட்சியில் பெரியப்பாதான் முதன்மை வேட்பாளர் யாருக்கு வாக்களிப்பதென்றே தெரியவில்லை.
இந்தக் குழப்பத்தில் சந்திகளில் நின்று ஊர்ச்சனம் என்ன கதைக்கிறது என்று நாடி பார்க்கும் நடைமுறைகளும் இருக்கும்.

ஊர்ப் பெருமை கூறி, உறவு சொல்லி, படலை திறந்து தம்பி எனக்குத்தான் வாக்களிக்க வேணும். நான் வென்றதும் முதல் வேலையாக உன் வீட்டு மண் ஒழுங்கைக்குத் தார் றோட்டுப் போடுவன் என வழங்கும் வாக் குறுதிகள் வானுயரப் பறக்கும்.
இவை தவிர, ஆலடிப் பிள்ளையார் கோயில் முன்றலில் சின்னையா அண்ணேயின் பிர சாரக் கூட்டம். வாக்களிக்காவிட்டாலும் கூட்டத்துக்கும் போகாவிட்டால் நாளைக்கு சின் னையா அண்ணேயின் முகத்தில் முழிக்க முடி யாது என்ற பண்பாட்டு கடைப்பிடித்தலில் கூட் டம் கூட்டமாய் ஊர்ச்சனங்கள் ஆலடியில் கூடிடுவர்.

சின்னையா அண்ணே; 1958இல் கொழும் பில் தனக்கு விழுந்த அடியைக் கூறி சத்தியாக் கிரகப் போராட்டத்தில் தான் பங்குபற்றியதை விளாசித் தள்ளி தமிழ் இனத்துக்காக தான் செய்த தியாகங்களை அள்ளிக் கொட்டுவார்.
கூடியிருப்பவர்களில் அவர் வயதை ஒத்த வர்கள் சத்தியாக்கிரகத்துக்கு செல்ல முன்னமே அரிசி மா பிட்டு சாப்பிட்டதை சொல்லிச் சிரித்து அந்தக் கூட்டத்துப் பொழுதையும் மகிழ்வாக்கிக் கொள்வர்.

கூட்டத் தலைவரை விழிக்கும்போது கூட்டத் தலைவர், அம்மான் என்றும் அடுத்துப் பேச இருக்கின்றது என் பெரிய தந்தை என்றும் உறவு முறை கூறுவதை பார்க்கும்போது, உள்ளூ ராட்சி சபைத் தேர்தல் ஒவ்வொரு வருடம் நடந் தாலும் நல்லது என்று எண்ணத் தோன்றும்.
ஆனால் இன்று நிலைமை அதுவல்ல. வேட் பாளர்கள் பலருக்கு தாங்களும் வேட்பாளர் கள் என்றே தெரியாமல் இருக்கிறது.

இன்னும் சில வேட்பாளர்கள் தேர்தல் முடி யும் வரை அஞ்ஞாதவாசம் சென்று விட்டனர். குட்டி ஆசையில் வேட்பாளர் பதவிக்கு பெய ரைக் கொடுத்துவிட்டு வீட்டில் நித்தம் சண்டைக் குள் காலம் கழிப்போர் என ஏகப்பட்ட சம்பவங் கள் நடக்கின்றன.
இவையயல்லாம் நடந்தாலும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் எப்பவாம். எங்கட ஊரில் யாரும் போட்டியிடுகினமோ என்ற கேள்வி களைத் தவிர வேறு எதையும் அறிய விரும்பா தவர்களாக எங்கள் தமிழ் மக்கள் இருக் கின்றனர்.
இதுவே தேர்தல் பற்றிய எங்கள் மக்களின் நிலைப்பாடு.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு