SuperTopAds

போயிங் விமானங்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமெரிக்கா உத்தரவு!

ஆசிரியர் - Admin
போயிங் விமானங்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமெரிக்கா உத்தரவு!

போயிங் 737 மக்ஸ் 8 ரக விமானங்கள் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அமெரிக்க போக்குவரத்து திணைக்கள செயலாளர் எலைன் சாவோ அந்நாட்டு கண்காணிப்பு ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

போயிங் விமானங்கள் விபத்துக்குள்ளாகி வரும் நிலையில் அவை வானில் பறப்பதற்கான அனுமதியை எவ்வாறு பெற்றுக்கொண்டது என்பது தொடர்பாக ஆராயுமாறும் அவர் மேலும் கோரியுள்ளார். 

இரண்டு போயிங் விமானங்கள் 5 மாதங்களுக்கும் குறைவான காலத்துக்குள் விபத்துக்குள்ளாகியுள்ளன. கடந்த ஒக்டோபரில் இந்தோனேஷியாவிலும் அதைத் தொடர்ந்து இம்மாதம் எத்தியோப்பாவிலும் மேற்படி விமானங்கள் விழுந்து நொறுங்கியுள்ளன. இதில் 300 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இரண்டு விமானங்களும் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானமை பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அமெரிக்கா உட்பட உலகின் பல்வேறு நாடுகள் போயிங் ரக விமான சேவைகளை நிறுத்தி வைத்துள்ளன. 

இதேவேளை போயிங் விமானத்துக்கான மென்பொருள் மேம்படுத்தல் தேவை எனவும் அதற்கேற்ப விமானிகளை பயிற்றுவிக்க வேண்டும் எனவும் போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.