SuperTopAds

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 38 பேர் கைது

ஆசிரியர் - Editor II
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 38 பேர் கைது

இலங்கை கடற்படையினர் கடந்த ஏப்ரல் 21 முதல் 28ஆம் திகதி வரை மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கைகளின் போது, ​​சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 38 நபர்கள் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தியதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கடைக்காடு, புதுமாத்தளன், திருகோணமலை, கொக்கிளாய், சேப்பல் தீவு ஆகிய கடலோர மற்றும் கடல் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

38 சந்தேக நபர்களுடன் 08 சட்டவிரோத வலைகள், 12 டிங்கி படகுகள் மற்றும் மின் விளக்கு உபகரணங்கள் என்பவற்றை கடற்படையினர் மீட்டிருந்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், மீன்பிடி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்கள் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, திருகோணமலை ஆகிய பகுதிக்கான கடற்தொழில் நீரியல் வளத்துறையினரிடம் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.