த.தே.கூட்டமைப்பு ஈழநாடு என்ற கனவில் செயற்படுகின்றது: புதிய கூட்டமைப்பின் விஞ்ஞாபனம்

ஆசிரியர் - Editor II
த.தே.கூட்டமைப்பு ஈழநாடு என்ற கனவில் செயற்படுகின்றது: புதிய கூட்டமைப்பின் விஞ்ஞாபனம்

ஆனந்த சங்கரி மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ள புதிய தமிழ் அரசியல் கூட்டணியான தமிழ்த் தேசிய விடுதலை கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று யாழ்ப்பாணத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய கூட்டணி உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக 15 விடயங்களை கொண்ட கொள்கைகளுடன் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளது.

வடபகுதி மக்கள் அடிக்கடி எதிர்நோக்கும் பல்வேறு காய்ச்சல், நோய்கள் உட்பட தொற்று நோய்களை தடுக்க நடவடிக்கை எடுத்தல், விவசாயத்தை வளர்த்தல், உணவு தொழில்நுட்பத்தை முன்னேற்றுதல், குறுக்கு வீதிகளை மறுசீரமைத்தல், போர், அகதிகளின் பிரச்சினைக்கு முன்னுரிமை வழங்கல்,

இந்தியாவில் உள்ள தமிழ் அகதிகளை இலங்கைக்கு மீண்டும் அழைத்து வரல், விதவை பெண்களின் பிரச்சினைகளை தீர்த்தல், பாடசாலை மாணவர்களின் போஷாக்கை மேம்படுத்துதல் உட்பட 15 விடயங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக செயற்பட்டு, மக்களுடன் செயற்பட போவதாகவும் அன்று விடுதலைப் புலிகள் , தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு செய்ய வலியுறுத்திய விடயங்களை செய்ய போவதில்லை எனவும் தமிழ்த் தேசிய விடுதலை கூட்டமைப்பு கூறியுள்ளது.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னும் ஈழ நாடு என்ற கனவை மனத்தில் வைத்து செயற்படுவதாகவும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு