'90ML' படத்தில் உள்ள ஓவியாவின் ஆபாச காட்சிகளுக்காக மோதிக்கொண்ட இயக்குனர், தயாரிப்பாளர்.
பிக்பாஸ் ஓவியாவின் நடிப்பில் 90ML என்ற படம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியாகியிருந்தது. பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பின்பு ஓவியா கதாநாயகி நடித்து வெளிவந்த படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பு இருந்தது. ஆனால் அந்த எதிர்ப்பார்ப்புகளை படத்தின் டிரைலர் சிறிது குறைத்தாலும் படத்திற்கான ரசிகர்கள் வழக்கம் வர தான் செய்தனர்.
இந்நிலையில் தான் 90ML படம் பற்றிய ஒரு விமர்சனத்தைப் பதிவிட்டு, `90ML' திரைப்படம் இந்தச் சமூகத்தை சீரழிக்கிறது. சமூகத்தின் மேல் அக்கறை வையுங்கள். நீங்கள் பணம் சம்பாதிக்க இளம் தலைமுறையினரிடம் நஞ்சை விதைக்காதீர்கள் என பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் பதிவிட்டார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் அங்கிள், சமூக கருத்து சொல்லும்படியான ஆபாச பாடல்களைக் கொண்ட 'சந்திரமௌலி' படத்தை ஒன்றும் நான் இயக்கவில்லை என 90ML பட இயக்குனர் அனிதா உதிப் கூற, எனக்குப் புரிகிறது ஆன்டி. ஆனால், ஒரு பாடலை இயக்குவது இயக்குநரின் முடிவு. நான் இந்த மாதிரி பாடல்கள் வேண்டும் என்று ஒருபோதும் கேட்பதில்லை. இது கிளாமராக இருக்கிறதே தவிர வல்கராக இல்லை என தனஞ்செயன் கூறி மாறி மாறி இருவரும் வார்த்தை மோதலில் ஈடுப்பட்டு கொண்டனர்.