காரைநகரில் தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர் மீது தாக்குதல்

யாழ்ப்பாணம் காரைநகரில் தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர் மீது தாக்குதல் மேற்கொண்டு , அவரது சங்கிலியும் அறுக்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
காரைநகரில் முன்னாள் தவிசாளரும் , தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளருமான கணேசபிள்ளை பாலசந்திரன் என்பவர் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காரைநகரில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு தான் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை , மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தன்னை வழிமறித்து தாக்கி , தனது சங்கிலியையும் அறுத்து சென்றுள்ளதாக ஊர்காவற்துறை பொலிசாரிடம் முறைப்பாடு வழங்கியுள்ளார்.
முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.