யாழில். ஊடகவியலாளர் மீது தாக்குதல்

யாழ்ப்பாணத்தில் தேர்தல் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளருக்கு கட்சி ஒன்றின் ஆதரவாளர்கள் அச்சுறுத்தல் விடுத்து தாக்குதல் மேற்கொண்டதுடன், அவரது ஊடக பணிக்கும் இடையூறு விளைவித்துள்ளனர்.
வேலணை துறையூர் பகுதியில் உள்ள வாக்கு சாவடி ஒன்றிக்கு அருகில் கட்சியின் ஆதரவாளர்கள் முரண்பட்டு கொள்வதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் , கட்சிகளின் ஆதரவாளர்கள் தர்க்கப்பட்டு கைகலப்பில் ஈடுபட்டதனை காணொளி எடுத்துள்ளார்.
அதனை அவதானித்த கட்சி ஒன்றின் ஏனைய ஆதரவாளர்கள் , ஊடகவியலாளரை அச்சுறுத்தி , அவரை தாக்கியுள்ளனர்.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.