வடக்கு, கிழக்கில் 19ஆம் திகதி முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு!

ஆசிரியர் - Admin
வடக்கு, கிழக்கில் 19ஆம் திகதி முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு!

வடக்கு- கிழக்கில் எதிர்வரும் 19ஆம் திகதி கடையடைப்பு போராட்டம், முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அன்றைய தினம் இடம்பெறும் கவனயீர்ப்பு பேரணியிலும் கலந்துகொள்ளுமாறும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்த போராட்டம் தொடர்பாக இன்று மட்டக்களப்பு புகையிரத வீதியில் உள்ள இணையம் அலுவலகத்தில் கிழக்கு மாகாண வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் அமைப்பு ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தது. 

இந்த சந்திப்பில் கிழக்கு மாகாண வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் அ.அமலநாயகி, அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ரி.செல்வராணி, திருகோணமலை மாவட்ட இணைப்பாளர் எஸ்.சரோஜா தேவி ஆகியோர் கலந்து கொண்டு கருத்துகளை வெளியிட்டனர்.

இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கிழக்கு, தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள், தொழில்நுட்ப கல்லூரி, ஆசிரிய பயிற்சி கல்லூரி, ஆசிரிய சங்கங்கள், பாடசாலை மாணவர்கள், அரசசார்பற்ற நிறுவனங்கள், ஊடக சங்கங்கள், சமய தலைவர்கள், இளைஞர் கழகங்கள், விளையாட்டு கழகங்கள், மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள், வர்த்தக சங்கங்கள், அரசியல் கட்சி உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அன்றைய தினம் வர்த்தக சங்கத்தினர் வடக்கு, கிழக்கில் தமது வர்த்தக நிலையங்களை மூடியும் அரச மற்றும் தனியார் போக்குவரத்து சங்கத்தினர் தமது போக்குவரத்து சேவைகளை நிறுத்தியும் பூரண ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகள் தமது அரசியல் வேறுபாடுகளை களைந்து இந்த போராட்டத்தில் பங்கேற்குமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கிழக்கு மாகாணத்தில் உள்ள மூவின மக்களும் தமது நியாயமாக கோரிக்கைக்கு ஆதரவு வழங்குமாறும் அச்சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு