முல்லைத்தீவு- கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு தமிழரசு கட்சியின் மூலக்கிளை தொிவு..
முல்லைத்தீவு - கரைதுறைப்பற்றுப் பிரதேசசபைப் பிரிவுக்குட்பட்ட, முள்ளியவளை கிழக்கு வட்டாரத்திற்குரிய, இலங்கை தமிழரசுக் கட்சியின் மூலக்கிளை, 28.02.2019 இன்றைய நாள் புதிதாகத் தெரிவு செய்யப்பட்டது.
வடமாகாணசபை முன்னாள் உறுப்பினரும், இலங்கை தமிழரசுக்கட்சியின் கரைது றைப்பற்று பிரதேசசபைப் பிரிவுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டிருப்பவருமான மதிப்புறு துரைராசா ரவிகரன் தலைமையில்
முள்ளியவளை கிழக்கு பொதுநோக்கு மண்டகத்தில் இடம்பெற்றது. நிகழ்வில் புதிதா க முள்ளியவளை கிழக்கு வட்டாரத்திற்குரிய மூலக்கிளைக்கு தலைவர், செயலாளர், பொருளாளர், உபதலைவர், உபசெயலாளர்,
மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் என தெரிவுகள் இடம்பெற்றதுடன், இலங்கை தமிழர சுக்கட்சிக்கு புதிதாக அங்கத்தவர்களும் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். மேலும் இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா,
வடமாகாணசபை முன்னாள் உறுப்பினரும் இலங்கை தமிழரசுக்கட்சியின் கரைதுறை ப்பற்று பிரதேசசபைப் பிரிவுக்கு பெறுப்பாக நியமிக்கப்பட்டிருப்பவருமான துரைராசா - ரவிகரன் ,
இலங்கை தமிழரசுக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்டத் தலைவர் அம்பலவாணர் - தனிநாயகம், இலங்கை தமிழரசுக்கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திருமதி.மேரிகமலா - குணசீலன்,
முள்ளியவளை கிழக்கு வட்டார பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா - லோகேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் இந் நிகழ்வில் அதிகளவான மக்கள் கலந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.