முள்ளியவளை பகுதியில் வீட்டு வளாகத்தில் இருந்து வெடிபொருள் மீட்பு
முல்லைத்தீவு மாவடடத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹீச்சிராபுரம் பகுதியில் தனியார் காணியில் வெடிக்காத நிலையில் வெடிபொருள் ஒன்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
காணி உரிமையாளர் வெடிபொருள் இருப்பதை முள்ளியவளை பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதை தொடர்ந்து, பொலிஸார் குறித்த வெடிபொருளை பார்வையிட்டு நாளை (26) நீதிமன்றில் அனுமதி பெற்று அகற்றுவதாக தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவடடத்தில் வெடிபொருட்கள் அகற்றிய பகுதியாக உறுதிப்படுத்தி, மக்களை குடியேற்றிய போதிலும் தொடர்ச்சியாக வெடிபொருட்கள் மீட்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.