யானைகளால் நாசமாக்கப்படும் பூதன்வயல் கிராமத்திலுள்ள விவசாய நிலங்கள்..
முல்லைத்தீவு - பூதன்வயல், மதவளசிங்கன் கமக்கார அமைப்பின் கீழுள்ள வயல் வெளிகளுக் குள்ளும், அதனை அடுத்துள்ள முறிப்பு கமக்கார அமைப்பின் கீழுள்ள மானாவாரி வயல் நில மான கஞ்சாப்பிலவு வயல் வெளிகளுக்குள்ளும் யானைகளின் அட்டகாசம்அதிகரித்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் தமது வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை, தமக்கு யானைக ளால் உயிர் அச்சுறுத்தல்களும் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே தமது வாழ்வாதாரத்தையும், தமது உயிரையும் பாதுகாக்கும் வகையில் யானைவேலி அமைத்துத்தர உரியவர்கள் முன்வரவேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
இது தொடர்பில் விவசாயிகளில் ஒருரான சின்னத்துரை - வின்சன்டீபோல் கருத்துத் தெரிவிக்கையில்,
முறிப்பு கஞ்சாப் பிலவு என்னும் பகுதியில் 4ஏக்கர் மானாவரி நெற்பயிற்செய்கை மேற்கொண்டி ருக்கின்றேன். கடந்த கன மழையின்காரணமாக பயிர்ச்செய்கை பாதிக்கப்பட்டிருந்தது. அதனை த் தொடர்ந்து யானை இப்பொழுது மீதமாகவுள்ள பயிர்களையும் அழித்துச் செல்கின்றது. வெடி களை கொழுத்திப் போட்டு மிகவும் சிரமப்பட்டு
எமது விவசாய நிலங்களை யானைகளிடமிருந்து பாதுகாக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அப் படியிருந்தும் இரண்டு மூன்று தடவைகள் யானைகள் வயலுக்குள் புகுந்து பத்து வயல்களுக்கு மே ல் அழித்துவிட்டது. ஒரு முறை யானை வயலுக்குள் இருந்து அழித்துக்கொண்டிருக்கும்போது காவலுக்காக வந்தேன்.
வெடியைப் போட்டு சத்தமிட்டபோது அது என்னை தாக்குவதற்காக துரத்திவந்தது. வேலிமறுபுறம் புகுந்து நான் பாய்ந்துவிட்டேன். துரத்திவந்த யானை வேலியை புடுங்கி எறிந்து, பெரிதாக சத்தமிட்டு அட்டகாசம் செய்தது. அரச அதிகாரிகள் எவரும் வந்து இதைப் பார்க்கவுமில்லை இதற்குரிய நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளவுமில்லை.
விளைந்திருக்கின்ற நெல்லை வெட்டி எடுத்துக்கொண்டு வயலை விட்டு வெளியேறுவதற்கும் அறுவடைக்கான இயந்திரங்களும் இல்லை. இவ்வாறான நிலையில் இரவுப்பொழுதானால் எப்போது விடியும் என்று பார்த்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே எமக்கு யானைவேலி அமைத்து எமது பயிர் நிங்களையும் எம்மையும் பாதுகாக்க
நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.
பூதன்வயல் விவசாயியான ஈசன் கருத்துத் தெரிவிக்கையில்,
மதவளசிங்கன்குளத்திற்குக் கீழான வயல்நிலங்ள் முழுவதிலுமாக யானைகளின் தொல்லை அதிகரித்துள்ளது. மாலை 06.00மணியாகியவுடனேயே யானைகள் வயல்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்கின்றன. வயலுக்கு காவலுக்காக வருகின்ற விவசாயிகளுக்கும் யானை தாக்குவதற்கு துரத்துகின்றது.
எனவே சம்பந்தப்பட்டவர்கள் இதற்குரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்கவேண்டும். மின்சார வேலி சம்பந்தமாக பலரிடமும் அறிவித்துங்கூட அதற்குரிய நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்பவில்லை. சாதாரணமாக 400 தொடக்கம் 500ஏக்கர் வரையிலான வயல்நிலங்களில், தற்போது யானைகள் 100ஏக்கர் வயல்நிலங்கள் அளவில் அழித்துள்ளது.
எனவே சம்பந்தப்பட்டவர்கள் இதற்குரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்கவேண்டும். என்றார். களமோட்டை வெளியில் பயிர்ச்செய்கை மேற்கொண்டிருக்கும் விவசாயிகளில் ஒருவரான சுரேஸ் கருத்துத் தெரிவிக்கையில், நான் மதவளசிங்கன் குளத்தின் கீழ் களமோட்டையில் ஐந்து ஏக்கர் வயல் செய்கை மேற்கொண்டுள்ளேன்.
இப்போது இப்பகுதிகளில் யானைகளின் தொல்லைகள் மிகவும் அதிகரித்துக்காணப்படுகின்றது. யானைகள் மந்தைகள் வருவதுபோல கூட்டங்கூட்டமாக வருகின்றன. அண்மையில் கூட வயல் காவலுக்காக இருந்த ஒருவரை யானை தாக்க முற்பட்டுள்ளது. நாம் நித்திரையின்றி மிகவும் சிரமத்துடனும், உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் வயல்நிலங்களை பாதுகாத்துவருகின்றோம்.
எமக்கு யானை வேலி அமைத்துத்தர வேண்டுமென உரியவர்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம். எமக்குரிய பாதுகாப்பு இல்லை எனில் இனி விவசாயம் செய்வதை கைவிடுததைத்தவிர வேறு வழியில்லை என்றார்.
வாரியா வயல் பகுதியில் நெற்செய்கை மேற்கொண்டுள்ள விவசாயிகளில் ஒருவரான தளபதி கருத்துத் தெரிவிக்கையில்,
வாரியாவயல் வயல் வெளியில் நான் நெற்செய்கை மேற்கொண்டுள்ளேன். ஒரே யானையின் அட்டகாசங்களைத் தாங்கமுடியாது உள்ளது. நாம் இதைப் பலரிடமும் தெரிவித்தும் இதற்குரிய தீர்வுகள் எதுவும் கிடைக்கவில்லை.
யானை வெடி ஒரு முறை தந்தார்கள் அது போதாமல் இருப்பதுடன் யானைகளை வெடிமூலம் துரத்தவும் முடியவில்லை.
மேலும் வயலின் அருகில் இருந்த தென்னைகளையும் யானை அழித்துச் செல்கின்றது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் யானை வேலி அமைத்துத் தருவதுடன் எமது பகுதி வயல் நிலங்களுக்கு மின்னிணைப்பின் மூலம் மின் விளக்குகளையும் அமைத்துத்தந்து யானைகளின் தொல்லையில் இருந்து நாம் விடுபட உதவி புரியுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.
மதவளசிங்கன் குளம் கமக்கார அமைப்பின் தலைவர் செ.வெற்றிவேலு இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்,
எமது பகுதியில் கிட்டத்தட்ட 450 ஏக்கர் காலபோக, பெரும்போகச் செய்கையாக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் யானை அழிவுகள் எமது பகுதிகளில் அதிகமாக உள்ளது.
யானைகளின் அட்டகாசங்கள் தொடர்பில் எமது விவசாயப் பகுதிகளிலும், அரசாங்க அதிபரிடமும் யானை வேலி அமைத்துத் தருமாறும் கேட்டுள்ளோம்.
அத்துடன் யானைக்கான வெடியும் தந்துதவுமாறும் கேட்டுள்ளோம். வெடி ஏற்கனவே தந்திருந்தும் தந்த வெடிகள் போதாமல் இருக்கின்றது.
எமது பகுதியில் நெற்பிலவுக்கண்டம், களமோட்டைக் கண்டம், மதவளசிங்கன் கட்டின் கீழ்வெளி, பூதன்வயல் வெளி, வாரியாவயல் வெளி என ஐந்து கண்டங்கள் உள்ளன.
இதில் வலதுகரைப் பகுதியில்தான் யானைகளின் அட்டகாசம் அதிகமாக உள்ளது. அங்கு விவசாயிகள் பெரும் சிரமத்தின் மத்தியில் தங்கள் வயல் நிலங்களை நாளாந்தம் பாதுகாத்தாலும், இடையிடையே யானைகள் அத்து மீறி காவல்காரர்களை அச்சுறுத்தி வயல் நிலங்களை அழிக்கின்றது.
மேலும் இடதுகரைப் பகுதியில் இராணுவ முகாம் இருந்தாலும் இராணுவ முகாமிற்கு மேற் பகுதியால் யானைகள் வந்து பயிர்களை அழித்துச் செல்கின்றது. இராணுவம் கூட இவ்விடயத்தில் அசமந்தப் போக்குடன்தான்இருக்கிறார்கள்.
எனவே இதற்குக் கட்டாயமாக யானை வேலி அமைத்துத் தந்தால் பெரிய உதவியாக இருக்கும். அதேவேளை எமது வயல் நிலப் பகுதிகளுக்கு மின்னிணைப்புகளைப் பெற்றுத்தந்து, மின்விளக்குகளைப் பொருத்துவதன் மூலமும் யானையை அப்புறப்படுத்தலாம். எனவே சம்பந்தப்பட்டவர்கள் இவ்விடயத்தில் கரிசனையுடன்
செயற்பட்டு எமது பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப் பெற்றுத்தர வேண்டும் என்றார்.