விக்னேஸ்வரனுக்கு படிப்பறிவில்லை! மேதை என்னும் தோரணையில் சுமந்திரன்..?

ஆசிரியர் - Editor II
விக்னேஸ்வரனுக்கு படிப்பறிவில்லை! மேதை என்னும் தோரணையில் சுமந்திரன்..?

தமிழ் மக்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் நீதியரசர் விக்னேஸ்வரன் ஆகியோருக்கு படிப்பறிவில்லை என்பது போலவும், தான் மட்டுமே படித்த மேதை என்னும் தோரணையிலும் எம்.ஏ.சுமந்திரன் அரசியலமைப்பு இடைக்கால அறிக்கை பற்றி பேசிக் கொண்டிருப்பதாக ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

நல்லூரில் தமிழர் விடுதலை கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு நேற்றைய தினம் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில், கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது, தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

புதிய அரசியல் அமைப்புக்கான இடைக்கால அறிக்கையில் எல்லாமே இருக்கிறது. ஆனால், அதனை எவரும் படிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறுகிறார்.

அவருடைய கருத்து ஒட்டுமொத்தத்தில் நாங்கள் அனைவரும் அடி முட்டாள்கள் என்பது மட்டுமே.

வடக்கு, கிழக்கு இணைப்பை பற்றி பேசுகிறார். எனினும், ஜனாதிபதியும், பிரதமரும் 73 தடவைகள் கூடிய வழிகாட்டல் குழுவில் ஒன்றுமே பேசப்படவில்லை என்று மிகவும் தெளிவாக சொல்கிறார்கள்.

இதேவேளை, சுமந்திரன் வடக்கு, கிழக்கு இணைப்புக்கு மூன்று யோசனைகள் கூறப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதனால், மக்கள் இந்த தடவை மாற்றம் ஒன்றை நிச்சயமாக கொண்டு வரவேண்டும் என்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு