SuperTopAds

கடலுணவு உற்பத்தி – யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் வீழ்ச்சி!

ஆசிரியர் - Admin
கடலுணவு உற்பத்தி – யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் வீழ்ச்சி!

கிளிநொச்சி மாவட்டத்தின் மீன்பிடி உற்பத்தியும் 2017 ஆம் ஆண்டை விடவும் 2018 ஆம் ஆண்டு சரிவையே சந்தித்துள்ளதாகத் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிளிநொச்சி மாவட்டத்தில் போருக்குப் பின்னர் 4 ஆயிரத்து 113 குடும்பங்களைச் சேர்ந்த 16 ஆயிரத்து 801 மீனவர்கள் கடற்றொழிலை நம்பி வாழும் நிலையில் இந்தக் குடும்பங்களில் இருந்து தற்போது 3 ஆயிரத்து 784 மீனவர்களே தொழில் புரிகின்றனர். இந்த 3 ஆயிரத்து 784 மீனவர்களின் தொழிலுக்காகவும் மாவட்டம் முழுமையாக 1004 கடற்கலங்கள் உள்ளன.

இவ்வாறு வாழும் மீனவர்களின் 2018 ஆம் ஆண்டின் வாழ்வாதாரத்துக்காகவும் அவர்களின் முதலீடுகளுக்காகவும் கிடைத்த மொத்த உற்பத்தி, 10 ஆயிரத்து 471 மெற்றிக்தொன் கடல் உணவுகளே. 2017 ஆம் ஆண்டு கிளிநொச்சி மாவட்டத்தின் உற்பத்தி 11 ஆயிரத்து 664 மெற்றிக்தொன்.

இந்த வகையில் 2017 ஆம் ஆண்டுக்கும் 2018 ஆம் ஆண்டுக்கும் இடையில் ஆயிரத்து 200 வரையான மெற்றிக்தொன் உற்பத்தி மாவட்டத்தில் குறைவாகவே கிடைக்கப்பெற்றுள்ளது என்று திணைக்களத் தகவல்கள் தெரிவித்தன.

யாழ்ப்பாண மாவட்டத்திலும் கடலுணவுகளின் உற்பத்தி 2017 ஆம் ஆண்டைவிட 2018 ஆம் ஆண்டு வீழ்ச்சியடைந்திருந்தது என்றும் யாழ்ப்பாணத் திணைக்களத்தினர் தெரிவித்திருந்தனர்.