வடக்கு கிழக்கு இணையாமல் இருந்தால்?

ஆசிரியர் - Editor II
வடக்கு கிழக்கு இணையாமல் இருந்தால்?

இணைந்த வட கிழக்கை அடிப்படையாக கொண்டு தீர்வு காணப்பட வேண்டும் என்ற கொள்கையிலயே இன்று ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் செயற்படுவதாக கோறளைப்பற்று பிரதேச சபைக்கு ஐக்கிய தேசிய முன்னனியில் போட்டியிடும் எச்.எம்.எம்.ஹக்கீம் தெரிவித்தார்.

கோறளைப்பற்று பிரதேச சபைக்கு மாவடிச்சேனை, செம்மண்ஓடை வட்டாரத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய தேசிய முன்னனியில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து செம்மண்ஓடையில் நேற்று இரவு இடம் பெற்றது.

இதில் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்.

வட கிழக்கை இணைக்க வேண்டும் என்ற கோட்பாட்டில்தான் இன்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளது. வட கிழக்கு இணைப்பதன் மூலம் முஸ்லிம் சமுகத்தினுடைய ஆணிவேரை ஆட்டுகின்ற ஒரு விடயமாக காணப்படுகின்றது.

இன்று நாங்கள் எந்த கட்சியை சார்ந்தவராக இருந்தாலும் கிழக்கு மாகாணம் தனிமையாக இருக்கவேண்டும். அப்படி இருந்தால் தான் முதலமைச்சர் என்றும் அமைச்சர் என்றும் மாகாண சபை கதிரைகளை அலங்கரிக்கின்ற சந்தர்ப்பம் எங்களுக்கு தொடர்ந்தும் நீடிக்கும். இதற்கு தனியான மாகாண சபை காணப்படுவதுதான் முக்கியமாக காரணம்.

கிழக்கு மாகாணம் முஸ்லிம்களை பெறுமான்மையாக கொண்ட சபையாகவுள்ளது. இதைத்தான் இன்று இணைக்க வேண்டும் என்று பேசுகின்ற ஒரு கட்சியும் அதன் வாக்காளர்களும் எனக்கு எதிராக செயற்படுகின்றனர்.

இந்த பிரதேசத்தில்தான் கட்சியின் தலைமைத்துவம் அரசியல் செய்ய வந்திருக்கின்றார்கள். வாழைச்சேனை பிரதேசத்தில் அவர்களுக்கு காலங்காலமாக வாக்களித்தவர்களிடம் ஐந்து பத்து நிமிடங்கள் கழித்து விட்டு செம்மண்ஓடையில் மூன்று நான்கு மணித்தியாலங்கள் கழிக்கின்ற அளவுக்கு செம்மண்ஓடை கிராமம் விளங்குகின்றது என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு