ஆனந்தசங்கரிக்கு வந்த சுடலை ஞானம்..

ஆசிரியர் - Editor I
ஆனந்தசங்கரிக்கு வந்த சுடலை ஞானம்..

தமிழர் விடுதலை கூட்டணியை சிலர் தம் சுயநலனுக்காக உடைத்திருக்காவிட்டால் பிரபா கரன் என்னும் இலட்சிய போராளி இன்று இருந்திருப்பான். 2004ம் ஆண்டே போர் நிறை வடைந்திருக்கும், பல லட்சம் மக்கள், பல ஆயிரம் போராளிகள் உயிருடன் இருந்திருப்பார்கள். 3 சுயநலவாதிகளே இத்தனை அழிவுகளுக்குமான பிரதான காரண கர்த்தாக்கள்.

மேற்கண்டவாறு தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி கூறியுள்ளர். தமிழர் விடுதலை கூட்டணி தலமையிலான தமிழ்தேசிய விடுதலை கூட்டமைப்பின் 

தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு இன்று  நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற் றிருந்தது. 

இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசும்போதே ஆனந்தசங்கரி மேற்கண்டவாறு கூறியுள்ளார். 

இதன்போது மேலும் அவர் கூறுகையில், 2004ம் ஆண்டு தமிழர் விடுதல கூட்டணியை சிலர் தங்கள் சுயநலனுக்காக உடைத்திருக்காவிட்டால் 2004ம் ஆண்டே போர் நிறைவடைந்திருக்கும். அப்போது பேரை நிறைவுக்கு கொண்டுவருவதற்கு புலிகளு ம் சாதகமான சமிக்ஞை காண்பித்தார்கள். ஆனால் சிலருடைய சுயநலன் சார்ந்த செயற்பாடுகளினால் போர் மேலும் 5 வருடங்கள் நடைபெற்றது. 

பல ஆயிரக்கணக்கான இலட் சிய போராளிகள் உயிரிழந்தார்கள். பல லட்சம் மக்கள் கொல்லப்பட்டார்கள். பிரபாகரன் என்ன இலட்சிய போராளி, இலட்சிய வீரன் இன்று இருந்திருப்பான். பல கோடி மதிப்பிலான சொத்துக்கள் பாதுகாக்கப்பட்டிருக்கும். இத்தனை அழிவுகளுக்கும் சில சுயநலவாதிகளே பிரதான காரணம். 3 சுயநலவாதிகளை நான் அடையாளப்படுத்துவேன். அவர்களு டைய பெயரை நான் இங்கே கூற விரும்பவில்லை. வேறு யாரும் கூறவிரும்பினால் கூறுங்கள். 

மேலும் இப்போது சமஷ்டி பற்றி பேசுகிறார்கள். 2005ம் ஆண்டே சமஷ்டி எங்கள் கதவுகளை தட்டியது. ஆனால் அதனை நாங்கள் கண்டுகொள்ளவேயில்லை. அதற்கும் காரணம் தமிழ் மக்களை வழிநடத்திய தீயவர்களே என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு