ஜனாதிபதியின் யாழ். பயணம் திடீர் ரத்து- பாதுகாப்புக் காரணமா?

ஆசிரியர் - Admin
ஜனாதிபதியின் யாழ். பயணம் திடீர் ரத்து- பாதுகாப்புக் காரணமா?

யாழ். மாவட்ட செயலகத்தில் நாளை இடம்பெறவிருக்கும் கிராம சக்தி கலந்துரையாடலில் பங்கேற்கவிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தப் பயணம் ரத்துச் செய்யப்பட்டமைக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.

நாளை யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி பயணம் மேற்கொள்ளவிருந்த நிலையில் அவரது பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணம், கோப்பாய் மற்றும் அச்சுவேலி பொலிஸ் பிரிவுகளில் பொலிஸ் பதிவு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. 

ஜனாதிபதியின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு யாழ்ப்பாணத்தில் அவர் செல்லும் இடங்களை அண்டிய பிரதேசங்களில் குடியிருப்பாளர்கள் மற்றும் நிறுவனங்களின் விவரங்களை சேகரிக்குமாறு ஜனாதிபதி செயலகத்தினால் பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் ஜனாதிபதி செல்லும் பகுதிகளில் வசிக்கும் குடியிருப்பாளர்கள், அரச - தனியார் நிறுவனங்கள், பொது அமைப்புக்கள் மற்றும் வெளியிடங்களிலிருந்து வந்து செல்வோர் தொடர்பான விவரங்களை பொலிஸார் அவசர அவசரமாக திரட்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. 

தொடர்ந்து அச்சுவேலி கைத்தொழில் பேட்டைக்குச் செல்லவும், அங்கிருந்து அச்சுவேலி பகுதியிலுள்ள கிராமம் ஒன்றில் இடம்பெறும் கிராம சக்தி திட்டம் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி கலந்து கொள்வதாகவும் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் இந்தப் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு