யாழில் மர்மக் காய்ச்சல் என்பது உண்மையா? மரணங்களுக்கு காரணம் இது தான்

ஆசிரியர் - Editor II
யாழில் மர்மக் காய்ச்சல் என்பது உண்மையா? மரணங்களுக்கு காரணம் இது தான்

யாழ். குடா நாட்டில் மர்மக் காய்ச்சல் பரவுவதாக வெளியாகியுள்ள தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“யாழ்ப்பாணத்தில் மர்மக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் மரணங்கள் சம்பவித்துள்ளதாகவும் பொதுமக்களிடையே அச்சநிலை உருவாகியுள்ளது. எனினும், அதில் எவ்வித உண்மையும் இல்லை.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் முல்லைத்தீவு பகுதியில் இன்புலுவன்ஸா தொற்று காணப்பட்டது. அதனால் ஒரு சில உயிரிழப்புகளும் அங்கு பதியப்பட்டிருந்தன.

இன்புலுவன்ஸா தொற்றுக்கு இலக்கான ஒருவர் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட போதிலும், அவர் உயிரிழந்தார். அந்த உயிரிழப்பு இன்புலுவன்ஸா பீ வகை தொற்றினால் ஏற்பட்டது என பதியப்பட்டுள்ளது.

இந்நிலையில், மர்மக் காய்ச்சல் காரணமாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி மேலும் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு