வீதியில் நின்ற மோட்டாா் சைக்கிளை திருடிய நபா், மடக்கி பிடித்த வா்த்தகா்கள், நீண்ட நேரத்தின் பின் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸாா்..

ஆசிரியர் - Editor I
வீதியில் நின்ற மோட்டாா் சைக்கிளை திருடிய நபா், மடக்கி பிடித்த வா்த்தகா்கள், நீண்ட நேரத்தின் பின் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸாா்..

யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் ஓர் வர்த்தக நிலையம் முன்பாக நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை களவாடிச் சென்றவரை வர்த்தகர்கள் மடக்கிப் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

கஸ்தூரியார் வீதியில் உள்ள நகை கடை ஒன்றில் நகைத் தொழில் புரியும் இளைஞன் மோட்டார் சைக்கிள் வீதியோரம் நிறுத்தி விட்டு கடையில் பணியில் ஈடுபட்டிருந்தார் . இதன்போது வீதியால் பயணித்த ஒருவர் அதனை அவதானித்து 

குறித்த மோட்டார் சைக்கிளை  உறுட்டிச் சென்றார். இதனை அவதானித்த அருகில் இருந்த மற்றும் கடை உரிமையாளர் சந்தேகம் கொண்டு மோட்டார் சைக்கிளை உறுட்டிச் சென்றவரை அணுகி வினாவியபோது தனது மோட்டார் சைக்கிள் 

எரிபொருள் நிரப்ப செல்வதாக தெரிவித்துள்ளார். இருப்பினும் சந்தேகம்கொண்ட கடை உரிமையாளர் அயிலில் உள்ள அனைத்து வர்த்தகா்களையும் அழைத்துள்ளார். இதன்போது வர்த்தக நிலைய உரிமையாளர்கள் சிலருடன் மோட்டார் 

சைக்கிள் உரிமையாளரும் சம்பவ இடத்திற்கு வருகை தந்தபோதும் தனது மோட்டார் சைக்கிள் என்று சர்ச்சையில் ஈடுபட்டுள்ளார். இறுதியில் மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் வாகன வரிப்பத்திரம் , காப்புறுதிப் பத்திரம் என்பவற்றுடன் 

பதிவுச் சான்றிதழையும் எடுத்து வந்து உறுதி செய்து தனது மோட்டார் சைக்கிளைப் பெற்றுக்கொண்டார். இதனையடுத்து சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிசாருக்கு தகவல் வழங்கிய நிலையில் நீண்ட நேரத்தின் பின்பு 

சம்பவத்திற்கு வந்த பொலிசார் களவில் ஈடுபட்டவரை கொண்டு சென்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு