வடமராட்சி, கரவெட்டி, கிராய்ப் பகுதியில் வயலில் சிக்கிய 13 அடி நீள பாம்பு!

ஆசிரியர் - Admin
வடமராட்சி, கரவெட்டி, கிராய்ப் பகுதியில் வயலில் சிக்கிய 13 அடி நீள பாம்பு!

யாழ்ப்பாணம், வடமராட்சி, கரவெட்டி, கிராய்ப் பகுதியில் உள்ள வயலில், 13 அடி நீளமான மலைப் பாம்பு அகப்பட்டுள்ளது. வயல் அறுவடையின்போது இது கண்டுபிடிக்கப்பட்டது. வயல் உரிமையாளர் அறுவடை செய்தபோது இந்த மலைப் பாம்பு அங்கு பதுங்கியிருந்ததைக் கண்டார்.இதனை வயல் உரிமையாளர் தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

வன்னிப் பகுதிகளில் வாழும் இவை வெங்கிணாந்திப் பாம்பு என அழைக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் பெரும்பாலும் காணப்படாத இந்த மலைப்பாம்பு வடமராட்சியில் பிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும் குறித்த பாம்புக்கு என்ன நேர்ந்தது என்பது தொடர்பில் வேறு தகவல்கள் கிடைக்கவில்லை.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு