10 நாட்களில் 380 கிலோ கேரள கஞ்சா மீட்பு, 90 வீதமானவை யாழ்.மாவட்டத்தில் மீட்பு. அதிா்ந்த பொலிஸாா்..
வடக்கு மாகாணத்தில் 10 நாட்களில் 380 கிலோ கஞ்சா மீட்பு. 90 சதவீதம் யாழ்ப்பாணத்தில்
வடக்கு மாகாணத்தில் கடந்த 10 நாள்களில் 380 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன், 40 பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட கஞ்சாவில் 90 சதவீதமானவை யாழ்ப்பாணத்திலேயே மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
வடக்கு மாகாணத்தில் கடந்த 10 நாள்களில் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும், மன் னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிலும் பெருந்தொகையான கஞ்சா கைப்பற்றப்பட்டுள் ளது. வவுனியா மாவட்டத்தில் குறைந்தளவு கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை மற்றும் பருத்தித்துறைப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மாத்திரம் 200 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாணத்தில் 29 பேரும், வவுனியாவில் 4 பேரும், மன்னாரில் 4 பேரும்,
கிளி நொச்சியில் 3 பேருமாக 40 பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.