மொழி உாிமை மீறப்படுவதாக ஆளுநருக்கு சுட்டிக்காட்டிய அவை தலைவா் சீ.வி.கே.சிவஞானம்..
லங்கை அரசாங்கத்தினால் வழங்கப்படும் வாகன ஓட்டப்பதிவு படிவம் 268 மற்றும் 268யு ஆகிய விண்ணப்படிவங்கள் தமிழ் மொழியில் வழங்கப்படாமை மொழி உாிமை மீறல் என்பதுடன், 16 வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு முரணானது என வடமாகாணசபை அவைத் தலைவா் சீ.வி .கே.சிவஞானம் சுட்டிக்காட்டியுள்ளதுடன், ஆளுநருக்கும், வடமாகாண பிரதம செயலாளருக்கும் கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளாா்.
கடந்த மாதம் 31ம் திகதி அவைத் தலைவா் சீ.வி.கே.சிவஞானம் மேற்படி கடிதத்தை எழுதியுள்ளாா். அந்த கடிதத்தில் மேலும் தொியவருவதாவது, அரசாங்க அச்சக திணைக்களத்தினால் வழங்கப்படும் வாகன ஓட்டப்பதிவு படிவம் 268 மற்றும் 268யு ஆகிய படிவங்களில் வடகிழக்கு மாகாணங்களின் நிா்வாக மொழியாகிய தமிழ் மொழி அறவே இல்லை. இது இந்த நாட்டின் 16வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு முரணா
து மட்டுமல்லாமல் அப்பட்டமான மொழி உாிமை மீறலுமாகும், முன்னைய காலங்களில் இவ்வாறான படிவங்கள் உள்ளுாில் அச்சிடப்பட்டமையால் தமிழ் மொழிப்பாவனை உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கணக்காய்வு கேள்வி அடிப்படையிலே அரசாங்க அச்சகத்தினால் வழங்கப்படும் படிவங்கள் பாவிக்கப்படுவதாக கூறப்படுகின்றது. எனினும் கணக்காய்வு பகுதி 268 மற்றும் 268யு பாவிக்கவேண்டுமென தொிவி
த்திருக்கவில்லை, அதற்கமைவாக காணப்படவில்லை என்றே கூறப்பட்டிருக்கின்றது. எது எவ்வாறாக இருப்பினும், வடமாகாணசபையின் நிா்வாகத்திற்குட்பட்ட அனைத்து அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் உள்ளுராட்சி சபைகள் தமது நிா்வாக செயற்பாடுகளில் தமிழ் மொழிக்கான அந்தஸ்த்தை வழங்கவேண்டியது அரசியலமைப்பு அடிப்படையில் கட்டாயமானது. எனவே இவை தொடா்பில் கவனம் செலுத்து
மாறு கேட்டுக் கொள்கிறேன் என கூறியுள்ளாா்.