இலங்கை கடற்பரப்பில் ஆச்சரியங்கள் காட்டும் உயிரினம்!

ஆசிரியர் - Editor II
இலங்கை கடற்பரப்பில் ஆச்சரியங்கள் காட்டும் உயிரினம்!

இலங்கையின் கற்பிட்டி கடற்பிரதேசத்தில் டொல்பின் மீன்களின் சாகசம் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த நவம்பர் மாதம் முதல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை டொல்பின்களுக்கான பருவக்காலம் ஆகும். இதன் காரணமாக அதிகளவிலான டொல்பின்கள் கற்பிட்டி கடற்பரப்பில் வலம் வருகின்றன.

டொல்பின்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், சாகசத்தை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

டொல்பின் கூட்டத்திலிருந்த 50 மீற்றர் தொலைவில் இருந்து அவற்றினை பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதற்காக சுற்றுலா படகு சேவைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக துறைசார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு