அரச ஊழியர்களுக்கான சத்திய பிரமாணத்தில் ஒரே நாடு..ஒரே இனம்..

ஆசிரியர் - Editor I
அரச ஊழியர்களுக்கான சத்திய பிரமாணத்தில் ஒரே நாடு..ஒரே இனம்..

2018ம் ஆண்டில் அரச உத்தியோகஸ்த்தர்க ளுக்கான சத்திய பிரமாணத்தில் ஓரே நா டு, ஒரே இனம், ஒரே கொடி என குறிப்பிடப் பட்டிருந்த விடயங்கள் தமிழ் உத்தியோகஸ் த்தர்கள் மத்தியில் குழப்பத்தை உண்டாக் கியுள்ளது.

அரச நிர்வாக முகாமைத்துவ அமைச்சினால் புது வருடத்தை முன்னிட்டு அரச திணைக்களங்களுக்கு அனுப்பட்டிருக்கின்ற அரசாங்க சேவை சத்தியப் பிரமாண உறுதிமொழி அறிவித்தல் குறிப்பிலேயே மேற்படி விடய ம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்படி சத்தியப் பிரமாணக் குறிப்பிலே குறிப்பிடப்பட்டிருப்பதாவது...


இரண்டாயிரத்து பதினெட்டாம் ஆண்டு ஐனவரி மாதம் கடமைகளைத் தொடங்கும் முதல் நாளான இன்றைய தினம் இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் இந் நாட்டு மக்களின்

எதிர்பார்ப்புக்களை யதார்த்தமாக மாற்றியமைக்கும் புதியதோர் ஆண்டின் ஆரம்பத்தில் காலடி எடுத்து வைக்கின்றோம்


இன்று ஆரம்பமாகும் புத்தாண்டினுள் ஒரே நாட்டின்,ஒரே இனத்தின் ஒரே கொடியின் நிழலில் ஐக்கியமாகவும் ஒரே மனப்பான்மையுடனும் வளர்ச்சியடைகின்ற தாய் நாட்டை அபிவிருத்தி செய்யும் பாரிய சவாலை வெற்றி கொள்வதற்காக அனைவரும் பயனடையும் வகையிலான துரித அபிவிருத்தியினூடே 2018 ஆம் ஆண்டில் உணவு உற்பத்தியை மேம்படுத்துவது தொடர்பாகவும் இந்த நாட்டு மக்களுக்கான பாதுகாப்பானதோர் எதிர்காலத்தை தோற்றுவிப்பதற்றாக பொது மக்களின் வரிப் பணத்தில் சம்பளம் பெறுகின்ற அரசாங்க ஊழியரான நான் அரசாங்க கொள்கைகள் மற்றும் நோக்கங்கள் என்பவற்றை நடைமுறைப்படுத்தும் பொருட்டு என்னிடம் ஒப்படைக்கப்படுகின்ற கடமைப் பொறுப்புக்களை வினைத்திறனாகவும் பயன்மிக்கதாகவும் திடசங்கள்பத்துடனும் உயரிய அர்ப்பணிப்புடனும் நேர்மையாகவும் மக்களுக்கு பக்கச் சார்பின்றியும் சத்தியப்பிரமாணம் செய்கின்றேன். அல்லது உறுதிமொழிகின்றேன் என்று அந்த குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்த்து.

இக் குறிப்பில் ஒரே இனம் என்ற பத்த்திலேயே தமிழ் அரச அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் மத்தியில் கடுமையான மன உலைச்சலை ஏற்படுத்தியிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு