உலகின் சக்திவாயந்த மடிக்கணினியை அறிமுகம் செய்த 'அசுஸ்'.
தாய்வானை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான அசுஸ் இந்தியாவில் புதிய சென்புக் சீரிஸ் லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. சென்புக் 15 (UX533), சென்புக் 14 (UX433) மற்றும் சென்புக் 13 (UX333) என மூன்று புதிய லேப்டாப்கள் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கின்றன.
ஏரோஸ்பேஸ்-கிரேடு அலுமினியம் மூலம் உருவாக்கப்பட்டிருக்கும் புதிய சென்புக் லேப்டாப்கள் MIL-STD-810G தரச்சான்று பெற்றிருக்கின்றன. அசுஸ் அறிமுகம் செய்திருக்கும் மூன்று புதிய லேப்டாப்களும் ராயல் புளு மற்றும் ஐசிக்கிள் சில்வர் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
அசுஸ் சென்புக் சென்புக் 15 (UX533), சென்புக் 14 (UX433) மற்றும் சென்புக் 13 (UX333) லேப்டாப்கள் 8 ஆம் தலைமுறை இன்டெல் கோர் சி.பி.யு. மற்றும் NVIDIA GeForce GTX 1050 Max-Q கிராஃபிக்ஸ் கொண்டிருக்கிறது. இவற்றில் 8 அல்லது 16 ஜி.பி. ரேம் வழங்கப்படுகிறது.
மெமரியை பொருத்தவரை 256 ஜி.பி., 512 ஜி.பி. அல்லது 1000 ஜி.பி. எஸ்.எஸ்.டி. ஆப்ஷன்களை கொண்டிருக்கிறது. இத்துடன் மெல்லிய பெசல்கள் கொண்ட ஃபுல் ஹெச்.டி. நானோ எட்ஜ் டிஸ்ப்ளேக்கள் கொண்டிருக்கின்றன. மூன்று மாடல்களிலும் ஹெச்.டி.எம்.ஐ. போர்ட் மற்றும் மைக்ரோ எஸ்.டி. அல்லது எஸ்.டி. கார்டு ரீடர் வழங்கப்படுகிறது.
அசுஸ் சென்புக் UX333FA-A4011T மாடல் விலை ரூ.71,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் டாப் எண்ட் மாடலான சென்புக் UX533FD-A9094T மாடல் விலை ரூ.1,39,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.