SuperTopAds

மீள்குடியேற்ற அமைச்சு வழங்கிய 90 மில்லியன் ரூபாய் நிதியை செலவிடாத முல்லைத்தீவு மாவட்ட செயலகம்..

ஆசிரியர் - Editor I
மீள்குடியேற்ற அமைச்சு வழங்கிய 90 மில்லியன் ரூபாய் நிதியை செலவிடாத முல்லைத்தீவு மாவட்ட செயலகம்..

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 2018ஆம் ஆண்டி மீள்குடியேற்ற அமைச்சின் ஊடாக அனுமதிக்க ப்பட்ட நிதியில் இருந்து 90 மில்லியன் ரூபா பயன்படுத்தப்படவில்லை. என தற்போது கண்டறிய ப்படுகின்றது. என நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி. சாந்தி சிறீஸ்காந்தராயா தெரிவித்தார்.

முல்லைத்தீவிற்கென 2018ஆம் ஆண்டு அனுமதிக்கப்பட்ட நிதிகளில் மீள் குடியேற்ற அமைச்சி ன் ஊடாக அனும்மிக்கப்பட்டிருந்த நிதியில் இருந்து 90 மில்லியனிற்கான பணிகள் இடம்பெற வில்லை. என தற்போது சுட்டிக்காட்டப்படுகின்றது. 

இது எதனால் இடம்பெறவில்லை. என்பதற்கு அப்பால் அந்த திதிகளிற்கான அனுமதிகளை மீ ளப் பெறமுடியுமா என்பதும் பெரும் கேள்விக் குறியாக உள்ளது. எனவே அந்த ஆண்டின் நிதிக ளை அவை ஆண்டு இறுதியில் கிடைத்தாலும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலே

மீளவும் கோரிக்கை விடமுடியும். எனத் தெரிவித்தமை தொடர்பில் மாவட்டச் செயலாளர் திரும தி.ரூபவதி கேதீஸ்வரனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது , மாவட்டத்திற்கு 2018ஆம் ஆண்டு அனுமதிக்கப்பட்ட மொத்த நிதியில் இன்றுவரை இன்னமும் 400 மில்லியன் ரூபாய் 

எமக்கு கிடைக்கவில்லை. அதேநேரம் மீள்குடியேற்ற அமைச்சின் நிதியில் நீண்டகாலம் இட ம்பெயர்ந்தோர் செயலணி என குறித்தொதுக்கப்பட்ட நிதியின் பணிகளில் உள்ள தாமதே இந்த நிதியாக சுட்டிக்காட்டப்படுகின்றது. எனப் பதிலளித்தார்.