இ.போ.ச ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்பின் பின்னணியில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நா டாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இல்லை.

ஆசிரியர் - Editor I
இ.போ.ச ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்பின் பின்னணியில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நா டாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இல்லை.

இ.போ.ச ஊழியர்கள் மேற்கொண்டுவரும் பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தின் பின்னா ல் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னே ஷ்வரனுக்கு எதிரான தமிழ்தேசிய கூட்ட மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சி லர் உந்துதலாக உள்ளார்களா எனும் கேள் விக்கு பணி பகிஷ்கரிப்பை நடத்திவரும் தொழில் சங்கள் மாறுபட்ட கருத்துக்களை கூறியுள்ளனர்.

வவுனியா பழைய பேருந்து நிலையத்தை மூடி புதிய பேருந்து நிலையத்திலிருந்து சேவைகளை ஆரம்பிக்கவேண்டும் என வ டமாகாண முதலமைச்சரும், மாகாண போ க்குவரத்து அமைச்சருமான சீ.வி.விக்னே ஷ்வரன் உத்தரவிட்டதை தொடர்ந்து இ.போ.ச ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளார்கள்.

இதன் பின்னணியில் முதலமைச்சருக்கு எதிரான தமிழ்தேசிய கூட்டமைப்பின் நா டாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இருப்ப தாக கூறப்படுவது தொடர்பாக பகிஷ்கரிப் பை நடாத்திவரும் இரு தொழிற்சங்கங்க ளிடம் ஊடகவியலாளர்கள் வினவியபோ தே மாறுபட்ட கருத்துக்களை அவர்கள் கூறியுள்ளனர்.

இது குறித்து வடமாகாண ஜனநாயக போக்குவரத்து ஊழியர்கள் சங்கத் தின் தலைவர் கிருஸ்ணன் புவி கூறுகையில்,

இ.போ.ச உழியர்களின் பணி பகிஷ்கரிப்பின் பின்னணியில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஷ்வரனுக்கு எதிரான தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பது உண்மையே.

முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனுக்கு ஆதரவு அதிகரித்துவரும் நிலையில் அவ ரை வீழ்த்தவேண்டும் என்பதற்காக, தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பி னர்கள் சிலர் இந்த பணி பகிஷ்கரிப்புக்கு பின்னால் இருந்து நடத்துவதாக மக்கள் மத்தி

யில் கருத்து உள்ளது. அதற்கு இயைந்தால்போல் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளு மன்ற உறுப்பினர்கள் சிலர் இந்த பணி பகிஷ்கரிப்பின் பின்னால் இருப்பது உண்மையே என அவர் கூறினார்.

இதே விடயம் தொடர்பாக இ.போ.சபையின் வடபிராந்திய சாலைகளின் இணைந்த தொழிற் சங்க தலைவர் அ.அருளானந்தம் கூறுகையில்,

இ.போ.ச ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்பின் பின்னணியில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நா டாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இல்லை. அவ்வாறான கருத்து திட்டமிட்டே பரப்பப்ப டுகின்றது. முதலமைச்சர் சர்வாதிகார போக்குடன் நடந்துகொள்கிறார்.

முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டபோது வடபிராந்தியத்தில் உள்ள 7 இ.போ.ச சாலைகளும் முதலமைச்சருக்கு ஆதரவாக பணி புறக்கணிப்பு செய்திருந்தமையினை வடமாகாண முதலமைச்சரும், மக்க ளும் மறக்க கூடாது எமக்கு பின்னால் அரசியல்வாதிகள் இல்லை.

இந்த பணி புறக்கணிப்பை மேற்கொண்டிருக்கும் இ.போ.ச ஊழியர்களுக்குள் பல கட்சிகளை சார்ந்த தொழிற்சங்கங்கள் இடம்பெற்றிருக்கின்றது. எனவே ஒரு கட்சி சார்ந்த தீர்மானங்கள் எ தனையும் எங்களால் எடுக்க இயலாது. எனவே எமக்கு பின்னால் தமிழ்தேசிய கூட்டமை

ப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இருப்பதாக கூறப்படும் கருத்து பிழையானதும், பொய்யா னதும் என்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு