தமிழீழ விடுதலை புலிகளின் மாவீரர்களுக்கு மட்டும் நினைவு தூபி, தோற்கடித்த வல்வெட்டித்துறை நகரசபை..

ஆசிரியர் - Editor I
தமிழீழ விடுதலை புலிகளின் மாவீரர்களுக்கு மட்டும் நினைவு தூபி, தோற்கடித்த வல்வெட்டித்துறை நகரசபை..

வல்வெட்டித்துறை- தீருவில் வெளியில் தமிழீழ விடுதலை புலிகளின் மாவீரர்களுக்கு மட்டு ம் நினைவுதூபி கட்ட வேண்டும். என வல்வெட்டித்துறை நகரசபையில் கொண்டுவரப்பட்ட பிரேரணை தோல்வியடைந்துள்ளது. 

வல்வெட்டித் துறை நகர சபையின் மாதாந்த அமர்வு இன்று நடைபெற்றது. அதில் தீருவில் பூங்காவில் ஏற்கனவே இருந்து அழிக்கப்பட்ட நினைவுத் தூபியை மீண்டும் நிர்மாணிக்கவு ம், அங்கு வேறு தூபிகள் 

அமைக்க வேண்டாம் என்ற பிரேரணை சுயேட்சைக்குழு மற்றும் முன்னணி, ஈ.பி.டி.பி. க ட்சி உறுப்பினர்களால் சபையில் முன்வைக்கப்பட்டது. இந்தப் பிரேரணையால் சபையில் குழப்ப நிலமை ஏற்பட்டது. 

அதனால் பிரேரணை தவிசாளரால் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. பிரேரணைக்கு ஆதர வாக 8 பேரும், எதிராக 8 பேரும் வாக்களித்தனர். பிரேரணை வாக்குகளால் சமநிலையில் இருந்த நிலையில், 

தவிசாளர் தனது எதிராக வாக்கைப் பதிவு செய்தார். அதனால் ஒரு வாக்கு வித்தியாசத்தில் பிரேரணை தோற்கடிக்கப்பட்டது. குறிந்த பூங்காவில் ஏற்கனவே கும­ரப்பா, புலேந்­தி­ரன் உட்­பட 12 போரா­ளி­க­ளுக்­கான 

நினை­வுத் தூபி அமைக்கப்பட்டிருந்தது. அது அழிக்கப்பட்டிருந்த நிலையில் நினைவுத் தூபியை மீள அமைத்து வேறு சிலரது தூபிகளையும் அமைப்பதற்கு கூட்டமைப்பின் உறுப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு