SuperTopAds

வடக்கில் அநுர அலை ஓய்ந்து விட்டது

ஆசிரியர் - Editor II
வடக்கில் அநுர அலை ஓய்ந்து விட்டது

நடைபெற்று முடிந்த தேர்தல் அனுர அலை என்று கூறப்பட்ட பொய் பரப்புரைக்கு முடிவு கட்டி தமிழ் தேசியத்தின் இருபை உறுதி செய்துள்ளது 

என தமிழரசுக் கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்

யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார் 

மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் தேசியத்தை வடக்கு கிழக்கில் வலிதாக்கி எமக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி. மாற்றம் என்ற அலைக்குள் மக்கள் அள்ளுண்டுவிடுவர் என பெரும் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்த சூழலில் நாம் இம்முறை 58 சபைகளில் போட்டியிட்டு, 40 சபைகளின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் வகையில் பெருவெற்றி பெற்றுள்ளோம். 

இந்த வெற்றியானது தமிழ் தேசியத்தின் பால் மக்கள் கொண்டுள்ள நேசத்தை காட்டுகின்றது.

இந்நேரம் பல சபைகளில் ஆட்சியமைக்கும் தரப்பாக நாம் இருந்தாலும் அதற்கான பெரும்பான்மை பலத்தை சக தமிழ் கட்சிகள் வழங்கவேண்டிய அல்லது ஆதரவு கோர வேண்டிய தேவையும் இருக்கின்றது.

காலச்சூழலின் நிலலையை உணர்ந்து சக தமிழ் கட்சிகள் அதரவு வழங்குவார்கள் என்ற நம்பிக்கையும் இருக்கின்றது.