அச்சுவேலி நகர் பகுதியில் உள்ள அழகு சாதன பொருட்கள் விற்பனை நிலையத்தில் தீ

யாழ்ப்பாணம் அச்சுவேலி நகர் பகுதியில் உள்ள அழகு சாதன பொருட்கள் விற்பனை நிலையம் பகுதியளவில் தீயில் எரிந்து நாசமாகியதுள்ளது.
கடையின் உரிமையாளர் இன்றைய தினம் புதன்கிழமை மாலை கடையை பூட்டும் போது , கடையின் பின் பக்கத்தில் இருந்து புகை மண்டலம் எழுந்ததை கண்ணுற்று அருகில் சென்று பார்த்த போது, கடையின் பின் பகுதி தீப்பற்றிக்கொண்டு எரிவதனை கண்டு அருகாமையில் உள்ள கடை உரிமையாளர்களை துணைக்கு அழைத்து தீயினை கட்டுப்படுத்த முயன்றார்.
பின்னர் மாநகர சபை தீயணைப்பு பிரிவினருக்கு அறிவித்த பின்னர் , தீயணைப்பு பிரிவினர் பலத்த சிரமத்தின் மத்தியில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணைகளில் , மின் ஒழுக்கு காரணமாக தீ ஏற்பட்டு இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்