யாழில் 323 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

யாழ்ப்பாணத்தில் பெருந்தொகை கஞ்சா போதைப்பொருளுடன் மூவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எழுவைதீவு கடற்பகுதியில் வைத்து மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்து 323 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பேசாலை என்றும் ஏனைய இருவரும் குருநகர் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவித்த பொலிஸார் மூவரிடமும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.