SuperTopAds

கிளிநொச்சி மாவட்டத்தில் 5 ஆயிரம் ஏக்கா் நெற் செய்கையே அழிவாம், விளைச்சல் வீழ்ச்சியை மூடி மறைக்கும் அதிகாாிகள்..

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சி மாவட்டத்தில் 5 ஆயிரம் ஏக்கா் நெற் செய்கையே அழிவாம், விளைச்சல் வீழ்ச்சியை மூடி மறைக்கும் அதிகாாிகள்..

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் 23ம் திகதி ஏற்பட்ட பாரிய வெள் ளப் பெருக்கினால்  5 ஆயிரம் ஏக்கர் வயல் மட்டுமே அழிவடைந்துள்ளதாக கணிப் பீட்டின் அடிப்படையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளம் மற்றும் இரணைமடுக் குளத்தி ல் இருந்து வெளியேற்றப்பட்ட நீர் வெளியேற்றப்பட்ட சமயத்தில் அதிக வயல்கள்  மேவி  நீர் பாய்ந்தமையினால் அதிக வயல்கள் 

அழிவடையும் என அஞ்சப்பட்டது. இதன்போது பல விவசாயிகளும் தமது வயல் நீரி ல் மூழ்கியமையினால் அனைத்தும் அழிவுப் பதிவில் பதியப்பட்டிருந்தது. இதன் பி ன்பு கமநல சேவைத் திணைக்களம் மாவட்டச் செயலகம் 

மற்றும் கமநல சேவைத் திணைக்கள காப்புறுதி சபை என்பன இணைத்து அழிவு ஏற்பட்டதான பதிவிற்கு உட்படுத்தப்பட்ட  அனைத்து பகுதிகளும் நேரில் பார்வை யிடப்பட்டு தனித்தனியே அளவீடுகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் பிரகாரம் மாவட்டம் முழுமையாக 3 ஆயிரத்து 600 விவணாயிகளிற்குச் சொ ந்தமான 8 ஆயிரத்து 800 ஏக்கர் வயல்களில் மட்டுமே அழிவுகள் ஏற்பட்டுள் ளனவே அன்றி ஏனைய அனைத்தும் 

முழுமையாக விளைந்து அறுவடையும் ஆரம்பித்து விட்டது. இவ்வாறு அழிவடைந்த 8 ஆயிரத்து 800 ஏக்கர் வயல் நிலத்திலும் நூறுவீதமான அழிவுகள் ஏறபட்டவை , 75 வீதம் , 50 வீதம் , 25 வீதம் அழிவு ஏற்பட்ட 

வயல்களும் உண்டு அவற்றின் பிரகாரம் மாவட்டத்தின் அழிவு விபரம் 5 ஆயிரத்தை அண்மித்த அளவே சேதம் ஏற்பட்டுள்ளதாக தற்போது கமநல காப்புறுதி திணைக்க ளம் கமநல சேவைத் திணைக்களத்திற்கு விபரம் சமர்ப்பித்துள்ளது.

இதேநேரம் இந்த சேதக் கணிப்பில் விவசாயிகள் தவறியிருந்தாள் தொடர்பு கொ ண்டால் அது தொடர்பிலும் ஆய்விற்கு உட்படுத்தப்படும். எனவும் தெரிவிக்கப்பட் டுள்ளது.