பேதைப் பொருளுக்கு எதிராக இளைஞா்கள் வீதியில் இறங்கி போராட்டம்..
வடக்கில் அதிகரித்து போதைப் பொருள் பாவனை, மற்றும் வன்முறைச் சம்பவங்களை கட்டுபடுத்த வலயுறுத்தி கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று யாழில் முன்னெடுக்க ப்பட்டது .
ஐனநாயகத்துக்கான இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் பிரதான பேரூந்து தரிப்பிடத்திற்கு முன்னால் இன்று இடம்பெற்றது. போதைப் பொருளை ஒழிக்க வேண்டுமெ ன வலியுறுத்தி
ஜனநாயகத்துக்கான இளைஞர் அமைப்பானது முன்னெடுத்த இப் போராட்டத்தில் மேலும் பல இளைஞர்களும் இணைந்து இப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்த க்கது.
போதைப் பொருளைக் கட்டுபடுத்து, சிறுவர் பெண்கள் துஸ்பிரயோகத்தை கட்டுபடுத்த வேண்டும், தோட்டத் தொழிலாளர்களது சம்பளத்தை 1000 ரூபாவாக உயர்த்த வேண்டும் போன்ற
கோஷங்களை போராட்டத்தில் ஈடுபட்டுருந்தவர்கள் எழுப்பியிருந்தனர். மேலும் இளைஞர் களது வேலைவாய்ப்புக்களை உறுதிப்படுத்த வேண்டும், இதற்கு அரசியல் தலமைகள் பொறுப்புடன்
செயற்பட வேண்டும் எனவும் இக் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்த னர்.