கல்வி அதிகாாிகளின் அசமந்தம், ஆண்டு ஒன்றுக்கு 200 மில்லியன் ரூபாய் நிதியை இழக்கும் வடமாகாணம்..
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் நிதியில் ஆண்டிற்கு 200 மில்லியன் ரூபா ஊதி யம் என்னும் பெயரில் புத்தளம் மாவட்டத்திற்கு கடந்த 5 ஆண்டுகளாக செல்லும் விடயத்திற்கு இன்றுவரை தீர்வை எட்டமுடியாத நிலையில் வடக்கு மாகாண கல்வி அமைச்சு காணப்படுவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் விசனம் தெரிவித்தார்.
வடமாகணப் பாடசாலைகள் யுத்தகாலத்தில் இடம்பெயர்ந்து புத்தளத்தில் இயங்கி ய நிலையில் தற்போதுவரையில் 6 பாடசாலைகள் புத்தளத்திலேயே தொடர்ந்தும் இயங்குகின்றன. அதற்கான சகல கொடுப்பனவுகளும் வடக்குமாகாண கல்வி அ மைச்சின் ஒதுக்கீட்டில் இருந்தே செல்கின்கின்றது. இதனால் குறித்த பாடசாலைக ளை நிரந்தரமாக புத்தளத்துடன்
இணைப்பதற்கான பேச்சுக்கள் பல தடவை இடம்பெற்றபோதும் அதற்கான பணி களில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படுத்தப்படவில்லை. மன்னார் கல்வி வலயத்தின் கீழ் செயல்படும் பாடசாலைகளே தற்போது வரையில் புத்தளத்தில் இயங்குகின்ற ன. அவ்வாறு இயங்கும் பாடசாலைகளை மீளத் திரும்புமாறு கடந்த 5 ஆண்டுகளா க பல தடவை கோரிக்கை விடுத்தும்
திரும்பாத காரணத்தினால் அவர்களை நிரந்தரமாகவே புத்தளம் மாவட்டத்துடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவ்வாறு நீண்டகாலமாக மேற்கொள்ள ப்பட்ட முயற்சியின் பயனாக அப் பாடசாலைகளை வயம்ப மாகாண கல்வி அமை ச்சின் கீழ் இணைக்க ஓர் இணக்கமும் கானப்பட்டது. அவ்வாறு காணப்பட்ட இண க்கத்தின் அடிப்படையில் அப்
பாடசாலைகளையும் அங்கே கற்பித்தல் பணியில் உள்ள ஆசிரியர்களையும் நிரந் தரமாகவே வயம்ப மாகாணத்துடன் இணைக்கும் முயற்சி இடம்பெ ற்றது. இருப்பி னும் குறித்த பணிகள் 2017ஆம் ஆண்டின் ஒக்டோபர் மாத்த்தில் முழுமை பெறும் என வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரும் தெரிவித்தார். மேற்படி பணிகள் எவையும் இதுவரை
இடம்பெறாதமையினால் குறித்த பாடசாலைகளில் பணிபுரியும் 167 ஆசிரியர்களி ன் ஊதியம் உள்ளிட்ட சகல செலவுகளும் 2018ம் ஆண்டும் வடக்கு மாகாணத்தின் ஒ துக்கீட்டில் இருந்தே வழங்கப்பட்டது. அப்போது கடும் எதிர்ப்பினை வெளியிட்டோ ம். இந்த தவறு 2019ஆம் ஆண்டு இடம்பெற மாட்டாது. எனப் பொய்நுரைத்தனர். ஆ னால் குறித்த 167 ஆசிரியர்களின் சம்பளம்
பாடசாலை நிர்வாகச் செலவு உள்ளிட்ட பணிக்காக ஆண்டுதோறும் வடக்கு மாகா ண சபையின் 200 மில்லியன் ரூபா பணமே செலவிடப்படுகின்றது. குறித்த பாட சாலைகளை மீண்டும் வடக்கிற்கு கொண்டு வருவதற்காக 2014ம் ஆண்டு மற்றும் 2015ம் ஆண்டுகளில் அப்போதைய வடக்கு மாகாண கல்வி அமைச்சர் தலமையி லான குழுவினர் முயற்சித்த நிலையில்
மேற்படி பாடசாலை ஆசிரியர்கள் 6 மாத காலம் மட்டுமே சந்தர்ப்பம் கோரியிருந் தனர். இதன் பின்னர். 2017ம் ஆண்டு ஆரம்பத்திலும் முயற்சித்தும் பலன் கிட்டவில் லை . இவ்வாறு ஓர் நிர்வாக ரீதியில் தீர்வை வழங்குவதன் மூலம் ஆண்டிற்கு 200 மி ல்லியன் ரூபா மீதப்படுத்தும் ஓர் செயல்பாட்டினையும் மாகாண சபை தனது 5 ஆ ண்டுகால செயல்பாட்டிலும்
தவறவிடப்பட்டமையினால் நிதி வுரயம் மட்டுமன்றி நிர்வாக ரீதியிலும் மன்னார் மாவட்ட மாணவர்களின் கல்வியிலும் பாதிப்படைவது தொடர்பிலும் வடக்கு மாகா ண கல்வி அமைச்சு கவனம் செலுத்தவில்லை. இவ்விடயம் தொடர்பாக மாகாண முன்னாள் முதலமைச்சரிடமும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் தனித்தனியாக கோரிக்கை விடப்பட்டது.
இருப்பினும் இந்தக் கோரிக்கை தொடர்பில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரோ அல்லது முதலமைச்சரோ 5 ஆண்டுகளாக எந்நவிதமான ஆக்க பூா்வமான நடவடிக்கையும் மேற்கோள்ளாத காரணத்தினால் இன்று புத்தளத்தில் கல்வி கற்கும் மானவர்கள் மன்னார் மாவட்டத்தின் வெட்டுப் புள்ளியில் பல்கலைக் கழகம் செல்லும் நிலையில்
உண்மையிலேயே மன்னாரில் கல்வி கற்கும் மாணவர்கள் வீதியில் நிற்கின்றனர். இதனை சீர் செய்து எமது மாணவர்களின் கல்விக்கு வழிகாட்டாது பிற விடயங்கள் தொடர்பில் பேசுவது அர்த்தமற்ற விடயம் என்றார். எனவே மேற்படி விடயம் தொட ர்பில் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் - ராகவன் குறித்த விடயத்தில் கவனம் செலு த்தி இந்த 6 பாடசாலைகளையும்
மன்னார் மாவட்டத்திற்கு கொண்டு வரவேண்டும் அல்லது புத்தளம் மாவட்டத்துடன் நிரந்தரமாக இணைக்க வேண்டும். அதற்கான விருப்பம் அந்த பாடசாலை நிர்வாக ங்களைப் பொறுத்தது. மாறாக மன்னார் மாவட்ட பதிவில் தொடர்ந்தும் புத்தளத்தி ல் இயங்க அனுமக்க முடியாது. என்றார்.