தீவிரமாக தேடப்படும் இலங்கை தமிழ் அகதி! மனைவியின் நடவடிக்கையால் பெரும் பரபரப்பு -

ஆசிரியர் - Editor II
தீவிரமாக தேடப்படும் இலங்கை தமிழ் அகதி! மனைவியின் நடவடிக்கையால் பெரும் பரபரப்பு -

கணவருக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணை உத்தரவை கொண்டுச்சென்ற பொலிஸாருடன் இலங்கை தமிழ் அகதி பெண் தகராற்றில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்ததாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பண மோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக யாழ். சாவகச்சேரி நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபரை கைது செய்ய Interpol உதவியை இலங்கை அரசாங்கம் நாடியுள்ளது.

குறித்த நபரை கைது செய்வதற்காக பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவு இந்திய தூதுரகத்தின் ஊடாக மண்டபம் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

கடந்த 2014ஆம் ஆண்டு சட்டவிரோதமான முறையில், இலங்கையிலிருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதிக்கு தயாபர ராஜா அவரது மனைவி உதயகலா மற்றும் அவர்களது 3 குழந்தைகள் அகதிகளாகச் சென்றுள்ளனர்.

குறித்த அனைவரும் கடவுச்சீட்டு தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மண்டபம் அகதிகள் முகாமில் வசித்து வருகின்றர்.

அகதிகளாக வந்த கதிர்வேல் தயாபர ராஜாவிற்கு எதிராக பல்வேறு பண மோசடிகள் குறித்த வழக்கில் இலங்கை நீதிமன்றினால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், Interpol இன் உதவியுடன் குறித்த நபரை கைது செய்து நாட்டிற்கு அழைத்து வரும் நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன்படி, யாழ். சாவகச்சேரி நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணை உத்தரவு ஒன்று இந்திய தூதுரகத்தின் ஊடாக மண்டபம் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இராமநாதபுரம் மாவட்ட பொலிஸ் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அனுப்பட்ட இந்த பிடியாணை உத்தரவை அகதி முகாமில் உள்ள தயாபர ராஜ் வீட்டிற்கு பொலிஸார் கொண்டு சென்றுள்ளனர்.

எனினும், தயாபர ராஜ் அங்கு இல்லாத நிலையில் அவரது மனைவி உதயகலாவிடம் பிடியாணையினை பொலிஸார் கொடுத்துள்ளனர்.

ஆனால் அதனை வாங்க மறுத்த அவர் பொலிஸாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் அவரது வீட்டில் பிடியாணையை ஒட்ட முயன்ற பொலிஸாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து கிராம நிர்வாக அதிகாரியின் மூலம் அந்த பிடியாணை உத்தரவு உதயகலாவின் வீட்டில் ஒட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொலிஸாருடன் இலங்கை தமிழ் அகதி பெண் தகராறில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்ததாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.<

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு