SuperTopAds

புதிய வடிவமைப்பு, கூடுதல் அம்சங்களுடன் உருவாகும் ஆப்பிள் ஏர்பாட்ஸ் 2

ஆசிரியர் - Admin
புதிய வடிவமைப்பு, கூடுதல் அம்சங்களுடன் உருவாகும் ஆப்பிள் ஏர்பாட்ஸ் 2

ஆப்பிள் நிறுவனம் இரண்டாம் தலைமுறை ஏர்பாட்ஸ் சாதனத்தை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், புதிய ஏர்பாட்ஸ் சாதனத்தில் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, ஹேண்ட்ஸ்-ஃப்ரீ சிரி கண்ட்ரோல், புதிய வடிவமைப்பு உள்ளிட்டவை இடம்பெறலாம் என கூறப்படுகிறுது.

அந்த வரிசையில், தற்சமயம் வெளியாகியிருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் தனது இரண்டாம் தலைமுறை ஏர்பாட்ஸ் 2 சாதனத்தை இந்த ஆண்டின் முதல் அரையாண்டிற்குள் அறிமுகம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய ஏர்பாட்ஸ் 2 முற்றிலும் புதிய வடிவமைப்பு, உடல் ஆரோக்கியம் சார்ந்த வசதிகளை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

புதிய 2019 ஏர்பாட்ஸ் சாதனம் ஏர்பாட்ஸ் 2 என அழைக்கப்படலாம் என்றும் இதில் பயோமெட்ரிக் விவரங்களை பரிமாற்றம் செய்வவற்கான சென்சார்கள் இடம்பெற்றிருக்கும் என கூறப்படுகிறது. இதுபற்றி டிஜிடைம்ஸ் வெளியிட்டுள்ள தகவல்களில் ஏர்பாட்ஸ் 2 சாதனத்தில் உடல்நலன் சார்ந்த அம்சங்கள் வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

எனினும், எதுபோன்ற அம்சங்கள் வழங்கப்படும் என்பது பற்றி எவ்வித தகவலும் இல்லை. குறிப்பாக புதிய ஏர்பாட்ஸ் 2 புதுவித வடிவமைப்பு அம்சங்களுடன் 2019 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டிற்குல் அறிமுகமாகும் என டிஜிடைம்ஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்பாட்ஸ் மற்றும் ஆப்பிள் வாட்ச் மூலம் ஆப்பிள் வருவாய் வருடாந்திர அடிப்படையில் 50 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியானது. அந்த வகையில், சர்வதேச அணியக்கூடிய சாதனங்கள் சந்தையில் ஆப்பிள் சாதனங்களுக்கு தொடர்பு வரவேற்பு கிடைக்கும்.

புதிய ஏர்பாட்ஸ் சாதனத்தில் வழங்கும் அம்சங்கள் பற்றி ஆப்பிள் சார்பில் பதிவு செய்யப்பட்ட காப்புரிமைகளில் உடல்நலம் சார்ந்த அம்சங்கள் பற்றிய தகவல்கள் கிடைத்திருக்கிறது. அதன்படி புதிய ஏர்பாட்ஸ் சாதனத்தில் பயனரின் இதய துடிப்பு, உடல் அசைவுகள், உடலில் எரிக்கப்பட்ட கலோரி விவரங்களை பரிமாற்றம் செய்ய வெல்னஸ் (wellness sensors) சென்சார்கள் வழங்கப்படுவதாக காப்புரிமையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 

இதுதவிர, புதிய ஏர்பாட்ஸ் சாதனத்தில் மொபைல் கேமிங் செய்வதற்கான விசேஷ அம்சங்களும், வயர்லெஸ் ஸ்பீக்கர் போன்று ஏர்பாட்ஸ் கேஸ் இயங்கும் என கூறப்படுகிறது. ஏர்பாட்ஸ் 2 சாதனத்தில் இதய துடிப்பு டிராக் செய்யும் அம்சம் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஒன்றாக இருக்கிறது.