SuperTopAds

சியோமியின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்

ஆசிரியர் - Admin
சியோமியின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்

சியோமி நிறுவனம் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் டீசர் வீடியோவை அதிராப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவினை சியோமி இணை நிறுவனரும், தலைவருமான லின் பின் சியோமியின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் டீசரை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வீடியோவில் இருக்கும் ஸ்மார்ட்போன் ஏற்கனவே வெளியான விவரங்களுடன் ஒற்றுப் போகும் படி காட்சியளிக்கிறது. ஸ்மார்ட்போனின் ஸ்கிரீன் இருபுறங்களிலும் மடிக்கக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இருபுறங்களிலும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என சியோமி தெரிவித்துள்ளது.

இருபுறங்களிலும் மடிக்கக்கூடியதாக உருவாகி இருக்கும் சியோமி ஸ்மார்ட்போன் டேப்லெட் மற்றும் மொபைல் போன் அனுபவத்தை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் மடிக்கப்பட்ட நிலையிலும் பின்புற ஸ்கிரீன் ஆஃப் ஆகாமல் இருக்கிறது. எனினும், இந்த ஸ்மார்ட்போன் தற்சமயம் வரை ப்ரோடோடைப் வடிவில் இருப்பதாக சியோமி தெரிவித்துள்ளது.

புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை வாடிக்கையாளர்கள் விரும்பும் பட்சத்தில் இதனை அதிகளவு உற்பத்தி செய்யும் பணிகளை எதிர்காலத்தில் துவங்குவது பற்றி முடிவு செய்ய இருப்பதாக சியோமி தெரிவித்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பெயரையும் வாடிக்கையாளர்களிடம் கேட்க இருப்பதாக தெரிவித்துள்ளது.

பிப்ரவரி 23 முதல் 26 ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவிற்கு (MWC 2019) சியோமி 20 வாடிக்கையாளர்களை தேர்வு செய்து அழைத்து செல்ல இருக்கிறது. அந்த வகையில் சியோமி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது.