வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இழப்பீடு வழங்காமை, விரைவில் அனா்த்த முகாமைத்துவ அமைச்சுடன் கலந்துரையாடல்..

ஆசிரியர் - Editor I
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இழப்பீடு வழங்காமை, விரைவில் அனா்த்த முகாமைத்துவ அமைச்சுடன் கலந்துரையாடல்..

கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு முறையாக இழப்பீடு வழங்காமை மற்றும் விவசாயிகளுக்கு காப்புறுதி வழங்காமை போன்ற விடயங்கள் தொடா்பாக விரைவில் அனா்த்த மு காமைத்துவ அமைச்சருடன் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடாத்துவதற்கு பிரதமா் தலமையிலான வட கிழக்கு விசேட செயலணியின் கூட்டத்தில் தீா்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது. 

கடந்த வருடத்தின் இறுதி பகுதியில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கனமழை மற்றும் வெள்ள பெருக்கு ஏற்பட்டிருந்தது. இதனால் கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் 25 ஆயிரம் வரையான குடும்பங்கள் பாதிக்கப்பட்டதுடன் பெருமளவு நெற் செய்கை அழிவடைந்தது. இந்நிலையில் அரசாங்கம் உறுதியளித்தத ன் பிரகாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கான 10 ஆயிரம் ரூபாய் இழப்பீடு இதுவரை 

வழங்கப்படவில்லை. மேலும் அழிவடைந்த நெற் செய்கைக்கான இழப்பீடுகளும் வழங்கப்படாத நிலையில் இழப்பீடுகளை மதிப்பீடு செய்வதற்காக தென்னிலங்கையிலிருந்து வரும் அதிகாாிகள் தொடா்பில் மக்கள் கடுமையான விமா்சனங்களை முன்வைத்து வருகின்றனா். இந்நிலையில் மேற்படி விடயம் தொடா்பாக நா டாளுமன்ற உறுப்பினா் சி.சிறீதரன் நேற்று நடைபெற்ற வடகிழக்கு அபிவிருத்தி செயலணியில், 

சுட்டிக்காட்டியுள்ளாா். இதன்போதே மேற்படி தீா்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக நாடாளுமன் ற உறுப்பினா் சி.சிறீதரனுடன் தொடா்பு கொண்டு கேட்டபோது கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளம் மற்று ம் கனமழையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான இழப்பீடு மற்றும் நெற்செய்கை அழிவுக்கான காப்பு றுதி வழங்கலில் அரசாங்கம் மாற்றான் தாய் மனப்பான்மையில் நடந்து வருகின்றது. 

அதனை பிரதமா் தலமையில் இடம்பெற்ற வடகிழக்கு அபிவிருத்தி செயலணியின் கூட்டத்தில் நேரடியாக சுட்டிக்காட்டியிருந்தேன். இதன்போது மேற்படி விடயம் தொடா்பாக ஆராய்வதற்கான அனா்த்த முகாமைத் துவ அமைச்சா் தலமையில் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடாத்த ஒழுங்குகளை செய்வதாக தீா்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது. ஆகவே அந்த கூட்டத்தில் இந்த விடயங்கள் தொடா்பாக

விாிவான தகவல்களை கூறி பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான இழப்பீடுகள் மற்றும் காப்புறுதி ஆகியவற் றினை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றாா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு