முதலமைச்சரிற்கெதிராக தமிழரசுக் கட்சி அரசுடன் கைகோர்ப்பு!

ஆசிரியர் - Admin
முதலமைச்சரிற்கெதிராக தமிழரசுக் கட்சி அரசுடன் கைகோர்ப்பு!

இலங்கைப்போக்குவரத்து சபையின் தொழிற்சங்கங்களை முன்னிறுத்தி வடக்கு முதலமைச்சரிற்கு எதிரான போராட்டங்களை தூண்டிவிட இலங்கை அரசு தமிழரசுக்கட்சி தலைவர்கள் ஊடாக முயற்சிகளை மேற்கொண்டுள்ளமை அம்பலத்திற்கு வந்துள்ளது.

சர்ச்சைக்குரிய வவுனியா பேரூந்து நிலையத்தை முன்னிறுத்தி வடக்கு மாகாண முதலமைச்சரின் முடிவுகளால் பெரிதும் பாதிக்கப்படுவதாக தெரிவித்தே புதிய போராட்ட களத்தை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அரசின் கைப்பாவையாக இருக்கின்ற இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தை தூண்டிவிட்டு தற்போது பணிப்புறக்கணிப்பில் குதிக்கப் போவதாக எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுவருகின்றது.

வருட பிறப்பு தினமான நாளை திங்கட்கிழமை வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் ஊழியர்களை தூண்டிவிட்டு பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் செயலாளர் க.அருள்பிரகாசம் என்பவர் தெரிவித்துள்ளார்.

“வவுனியா புதிய பேருந்து தரிப்பிட விவகாரம் தொடர்பில் வடபிராந்திய போக்குவரத்துச் சபை ஊழியர்கள் 6 பேர் வவுனியா நீதிவான் நீதிமன்றில் கடந்த 27ஆம் திகதி பொலிஸாரால் முற்படுத்தப்பட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சருடன் பேசி உரிய தீர்வைக் கண்டு மன்றுக்கு வரும் 3ஆம் திகதி அறிவிக்குமாறு வடபிராந்தி ஒன்றிணைத்த தொழிற்சங்கத்துக்கு நீதிமன்று உத்தரவிட்டது.

இந்த நிலையில் வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் நேற்றைய தினம் கூட்டம் ஒன்றுக்கு அழைப்புவிடுத்திருந்தார்.

இலங்கைப் போக்குவரத்துச் சபை அதிகாரிகள், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அதிகாரிகள், வடக்கு மாகாண மாவட்ட ரீதியாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் உள்ளிட்டோரை அழைத்தார். 

அதில் கலந்துகொள்ள அழைப்பு கிடைக்காத போதும் போக்குவரத்துச் சபை அதிகாரிகளுடன் வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் பங்கேற்றனர்.

வவுனியா பேருந்து நிலைய விவகாரத்தில் தொழிற்சங்கத்துக்கு இடமில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.

அரச ஆதரவு குறித்த அமைப்பே குழப்பங்களை தூண்டி வருவதாக முதலமைச்சரிற்கு அறிக்கை கிடைத்ததையடுத்தே அவ்வாறு உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையினில் முதலமைச்சருக்கு எதிராக வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் ஊழியர்களைப்பயன்படுத்தி கொடும்பாவி எரிப்பு மற்றும் பேரணியென திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே முன்னரும் அப்போதைய போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரனிற்கு எதிராக கேவலமான வகையில் அரசு ஆதரவு தரப்புக்கள் போராட்டத்தை நடத்தியிருந்தன.அவரது கொடும்பாவி பேரூந்தில் கட்டிதொங்கவிடப்பட்ட நிலையில் பேரணிகளும் நடந்திருந்தன.

இம்முறை தமிழரசுக்கட்சி தலைவர்கள் சிலரது தூண்டுதலில் இத்தகைய போராட்டங்களை முதலமைச்சரிற்கு எதிராக மேற்கொள்ளவும் அவரது கௌரவத்தை குறைக்கவும் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு