யாழில் அரச அதிகாரிகளின் திருவிளையாடல்!

ஆசிரியர் - Editor II
யாழில் அரச அதிகாரிகளின் திருவிளையாடல்!

யாழ்.குடாநாட்டில் அரச உத்தியோத்தர்கள், சுகாதார உத்தியோகத்தர்கள் போன்று செயற்பட்டு சிலர் கொள்ளையில் ஈடுபடுகின்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றது.

அவ்வாறன சம்பவம் ஒன்று நேற்று காலை 9.20 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

யாழ். தென்மராட்சி, கைதடி - நாவற்குழி தெற்கு பகுதியில் சுகாதார உத்தியோகத்தர்கள் எனத் தெரிவித்து வீட்டுக்குள் நுழைந்த இருவர், வீட்டிலிருந்த குடும்பப் பெண்ணின் ஏழு பவுண் தாலிக்கொடியை அறுத்துச் சென்றுள்ளனர்.

கோவிலாக்கண்டிப்பகுதியில் வசிக்கும் இராமையாபிள்ளை பிள்ளையம்மா என்ற 58 வயதுடைய குடும்பப் பெண்ணின் தாலிக் கொடியையே கொள்ளையர்கள் அறுத்துச் சென்றுள்ளனர்.

“சுகாதார உத்தியோகத்தர்கள் என்று தெரிவித்து மோட்டார் சைக்கிளில் இருவர் வந்தனர். அவர்கள் கழுத்துப்பட்டி, சப்பாத்து அணிந்திருந்தனர். வீட்டு வளவுக்குள் நோட்டமிட்ட இருவரும், சுற்றாடலில் நுளம்புப் பெருக்கம் காணப்படுகின்றது எனத் தெரிவித்தனர்.

அதனால் நுளம்புத் தடுப்புக்கு புகையடிப்பதற்கு கையொப்பமிடுமாறு கோரினர். எனக்கு அருகே வந்தனர். எனது தாலிக்கொடியை அறுத்துக் கொண்டு வெளியில் தயார் நிலையில் இருந்த மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றனர்....” என்று பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்தார்.

இதேவேளை, இந்தச் சம்பவம் இடம்பெற்ற வீட்டுக்கு அயலில் உள்ள வீட்டுக்குச் சென்று நவீல்ட் பாடசாலைக்கு பணம் சேர்ப்பதற்காக கூறி கொள்ளையர்கள் இருவரும் பணம் பெற்றுள்ளனர்.

யாழ்.குடாநாட்டில் அரச உத்தியோத்தர்கள், சுகாதார உத்தியோகத்தர்கள் போன்று பாசாங்கு செய்து சிலர் கொள்ளையில் ஈடுபடுகின்றனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் யாழ் மக்களை அவதானத்துடன் இருக்குமாறும் பொலிஸார் கேட்டுளளனர்.<

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு